45 நிமிட நேரத்தில் 300-க்கும் அதிகமான எறிகணைகள்

12 04 2009
பாதுகாப்பு வலயப் பிரதேசம் அதிகாலை தொடக்கம் படையினரின் எறிகணைத் தாக்குதலால் அதிருகின்றது – 45 நிமிட நேரத்தில் 300-க்கும் அதிகமான எறிகணைகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 02:15.46 AM GMT +05:30 ]
 
idps_flood_12_9_445முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக என சிறிலங்கா கொடுங்கோல் அரசினால்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி  படையினர் இன்று அதிகாலையில் அகோர எறிகணைத் தாக்குதலை தொடங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன், முன்நகர்வு நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு வசதியாகவே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:15 மணியளவில் இந்தத் தாக்குதலை சிறிலங்கா படையினர் தொடங்கியிருப்பதாகவும் தொடர் எறிகணைத் தாக்குதல்களால் வன்னிப் பிராந்தியமே அதிர்ந்து கொண்டிருப்பதாகவும் களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பச்சைப்புல்மோடையை அடுத்துள்ள பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 45 நிமிட நேரத்தில் 300-க்கும் அதிகமான எறிகணைகள் வீழ்ந்து வெடித்தாக அங்கிருந்து முதலில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக பதுங்கு குழிகளையும் பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் இருப்பதால் இனறைய தாக்குதலில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது

idps_flood_12_9_4451

from_pokk_09_0_09_04


செயற்பாடுகள்

Information

பின்னூட்டமொன்றை இடுக