பலத்த சேதம்; முன்னகர்வு தீவிரம் – பிரிகேடியர் தெரிவிப்பு

30 04 2009
vis-200வன்னியில் இராணுவ முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளால் 7 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

 

இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தமது முன்னகர்வு முயற்சியை தீவிரப் படுத்திய படையினர் இரட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டுள்ள சுமார் 700 மீற்றர் அளவான பாரிய மண்மேட்டினை கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியதாவது :

தற்கொலைக் குண்டுதாரிகள் நால்வர் மோட்டார் சைக்கிள்களில் வந்து இரண்டு தடவையும் கெப் ரக வாகனத்தில் வந்து ஒரு தடவையும் தாக்குதல்களை நடத்தினர். கடந்த 24 மணிநேரத்தில் 7 தற்கொலைத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தை நோக்கிய முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் படைத்தரப்பில் பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இருப்பினும் புலிகளின் அத்தாக்குதல்களுக்கு மத்தியில் தீவிர முன்னகர்வு முயற்சினை மேற்கொண்ட படையினர் இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய மண்மேடொன்றின் ஒருபகுதியினைக் கைப்பற்றியுள்ளனர். என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.





மக்களின் அவலநிலை

30 04 2009
014வன்னியில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான வன்னி மக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் அடைந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள். 
இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்ற இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் உங்கள் பிள்ளைகள் ஒருநாள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தாலும் தயவு செய்து முன்னரே பதிவு செய்து கொள்ளுங்கள் என உத்தரவிட்டனர்.  

அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு எங்களால் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது. உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து பிரிக்கமாட்டோம். பதிவு செய்யாமல் உங்களின் பிள்ளைகள் யாராவது விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்ததாக எங்களுக்குத் தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்க்ள்

இதை நம்பிய பெற்றோர் தங்களின் பிள்ளைகளைப் பதிவு செய்தார்கள். பதிவு செய்த பின் பிள்ளகளை பெற்றோருடன் விட்டுச்சென்ற இராணுவத்தினர் மறுநாள் காலையில் அனைத்து முகாமுகளுக்கும் சென்று, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என பதிவு செய்த ஆண்கள் பெண்கள் என 400 ற்கும் மேற்பட்டவர்களை பலவந்தமாக ஏற்றி சென்றுள்ளனர்.

இவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றார்கள்.

02304016