சாதி

22 10 2013

சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையே. இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே இதனை வெளியேற வழியற்று அடைபட்ட வகுப்பு என்று கூறலாம். இது சமூக வழக்கு, அதிலிருந்து தோன்றிய அரசுகள் போன்றவற்றால் பாதுகாக்கப்டுகிறது.

சாதிய ஒடுக்குமுறை

முதன்மைக் கட்டுரை: சாதிய ஒடுக்குமுறை

ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை மீறல்களுக்குபாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறை அகும். தெற்காசியாவில் சாதிய ஒடுக்குமுறையால் பெரும்பான்மை மக்கள் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவை வெளிப்படையான தீவர வன்முறையான ஒடுக்குமுறைகள், சமூக நிறுவனக் கட்டமைப்புகளின் ஊடாக நடைபெறும் ஒடுக்குமுறைகள், நுண் ஒடுக்குமுறைகள் என்று பல வகைகளில் அமைகின்றன.

சாதியின் தோற்றம்

சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின்மானிடவியல் கோட்பாடுகள்[1] என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்த பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாக கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:

 1. மரபுக் கோட்பாடு (traditional theory)
 2. தொழிற் கோட்பாடு (occupational theory)
 3. சமயக் கோட்பாடு (religious theory)
 4. அரசியற் கோட்பாடு (political theory)
 5. இனக் கோட்பாடு (racial theory)
 6. படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)

மரபுக் கோட்பாடு

சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும். ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.

தொழிற் கோட்பாடு

சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக ‘தூய்மை’ ‘தீட்டு’ வரையறை செய்யப்பட்டன.

பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.

சமயக் கோட்பாடு

சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையை தோற்றுவித்தது.

அரசியற் கோட்பாடு

உயர் சாதியினர் தமது சலுகைகளை தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துகொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.

இனக் கோட்பாடு

ஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. “குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டை காட்டத் தொடங்கினர்.”[2]

இந்திய சாதி அமைப்பு

இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றாம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன.

தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்புமுறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன.

வடமொழியில் உள்ள மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருபதாகத் தெரியவில்லை.

மணியன். நா

Advertisements
பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

7 05 2013

படம்

பெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது.

இந்த நெருக்கடி பெரும்பாலும், ‘வளத்த கடா முட்ட வந்தா, வச்ச செடி முள்ளானா’ என்கிற பாணியில் அவரால் ஆளக்கப்பட்டவர்களாளேயே உண்டாக்கப்படுகிறது. பெரியார்  காலத்திலேயே இதுபோன்ற நெருக்கடிகளை அவர் சந்தித்திருக்கிறார்.

1936ல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைவர் பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டே ப.ஜீவானந்தம், ‘பெரியார் நீதிக்கட்சிகாரர்களிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார்’ என்று கடுமையாக விமர்சித்தார்.  ஜீவானந்ததி்ற்கு நன்றாக உரைப்பது போல், பெரியார் உரிய சாட்டையடி பதிலை தன் தலைமை உரையில் தந்தார்.

ஆனாலும், பின்னாளில் ஜீவா, பெரியாரிடம் இருந்து விலகி, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கட்டினார். அதான் கம்பராமாயணத்திற்கு மார்க்சிய முலாம் பூசினார்.

அதற்குப் பிறகும் பார்ப்பனர்கள் மனம் குளிர வைக்கும் வகையில், பெரியாரை மிக கேவலமாக, ‘கைகூலி, சாக்கடை’ என்றெல்லாம் திட்டி எழுதினார். உண்மையில் அவரின் நோக்கம், பெரியாரிடம் இருந்தால் இந்து மதத்தை, பார்ப்பனர்களை, ஜாதி வெறியர்களை பகைத்துக்கொண்டு வாழ வேண்டும். பார்ப்பன ஆசிர்வாதம் இல்லாமல், நாம் தனி தலைவராக உருவாவது தடைபடும் என்பதுதான்.

சுருக்கமா சொல்லுனும்னா ‘கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’

இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜீவா அறியப்படுகிறார். ஆனால், தமிழர்களின் வரலாற்றில் பெரியார்தான் தலைவராக போற்றப்படுகிறார்.

***

பெரியாரின் பிள்ளைகளாக இருந்த அண்ணாத்துரையும் அவரது கூட்டாளிகளும்,1949 ல் பெரியாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அவர்கள் பெரிய குற்றமாக சொன்னது பெரியாரின் இரண்டாவது் திருமணம். உண்மையில் அதுவல்ல காரணம். நடிகர் வடிவேல் பாணியில் சொல்வதாக இருந்தால் அதுச்சும்மா…’

அவர்கள் தனி வண்டி ஓட்ட ஆசைப்படடார்கள்.

பெரியார்-மணியம்மை திருமணம் 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் நடபெற்றது. அண்ணாத்துரை புதுகட்சி துவங்கியது அதே ஆண்டு செப்டம்பர் மாதம். அவ்வளவு வேகம்.

பெரியாரோடு இருந்தால், அது சாத்தியப்படாது. அதனால்தான், வெளியில் சென்றவுடன் பார்ப்பனியத்தை, இந்து மதத்தை, ஜாதியை விமர்சிப்பதை நிறுத்தி,  எல்லோரும் வந்து எறிக்கொள்ளும்படியான, ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்ற போர்டு மாட்டிய தமிழ் வண்டி ஓட்டினார்கள். பெரியாருடன் சேர்ந்து பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு என்று பேசி, போராடி மக்களிடம் செருப்படியும், கல்லடியும் வாங்குவதற்கு பதில் – தமிழ், தமிழன் என்று  பேசி தமிழர்களிடம் செல்வாக்கு பெருவது சுலபமாகவும், வசதியாகவும் இருந்ததால், இந்த தமிழ் வண்டி 100 மைல் வேகத்தில் பறந்தது.

‘தமிழன்’ என்ற சொல் கூட்டம் சேர்ப்பதற்கு வசதியாக இருந்தது. கூட்டம் சேர, சேர தமிழ் உணர்வும் பீறிட்டுக் கிளம்பியது. தமிழ் உணர்வு கட்சியாக மாறியது. கட்சி ஆட்சியாக மாறியது.

இன்றைக்கும் விஜயகாந்த் வரை, ‘தமிழ்-தமிழன்’ என்று கொஞசம் டென்சனாக சவுண்டு கொடுத்துப் பேசினால், கூட்டம் சேருகிறது. கூட்டத்தை பார்த்த உடனே அவர்களுக்கு ஆட்சி கனவு வருவதற்கு அண்ணாதுரையின் ‘பார்மெட்டே’ பிள்ளையார் சுழியாக பயன்படுகிறது.

இதில் வேடிக்கை, பெரியாரின் தலைமை பிடிக்காமல் தனியாகப் போய் கட்சி ஆரம்பித்த அண்ணாத்துரை, ‘திமுகவின் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. அது தந்தை பெரியாருக்காக காத்திருக்கிறது’ என்று பெரியாரை திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு திமுகவில் சேர அழைப்பு விடுத்தார். அல்லது பெரியார் மீது செண்டிமென்டாக தாக்குதல் நடத்தினார். இத்தனைக்கும் பெரியார், மணியம்மையை விவாகரத்துகூட செய்துவிடவில்லை. அப்புறம் ஏன் இந்த அழைப்பு?

பெரியாரின் தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்கள் ஏன் பெரியாரை விட்டு விலக வேண்டும்? ஏன் புதுக் கட்சி துவங்கவேண்டும்? பெரியாரின் தலைமைதான் முக்கியம் என்றால் மீண்டும் திகவிற்கே திரும்பி  இருக்கலாம் அல்லது திகவைவிட்டு போகாமல் இருந்திருக்கலாம்.

பெரியாருக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பு, தொண்டர்கள் மத்தியில், ‘அண்ணாவிற்கு என்ன ஒரு பெருந்தன்மை? இவரல்லவா தலைவர்!’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கான யுக்தியல்லவா? இதை விடவா பெரியாரை கேவலப்பத்த முடியும்?

அண்ணாத்துரை மற்றும் கூட்டாளிகளின் இந்த செயல்களைப் பற்றி, சுருக்கமா சொல்லுனும்னா  ‘இந்தக் கிளிக்கும் இறக்கை முளைளச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’

இன்றைக்கும் ஆட்சியில், அதிகாரத்தில் அண்ணாவும் அவரின் திமுகவும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பெரியார் மட்டும்தான் வரலாற்றில் இருக்கிறார்.

***

பெரியாருக்கு பின் மிக சமீப காலங்களில் பெரியாரின் பேரன்களில் சிலர் திடீர் என்று ஒருநாள், ‘பெரியார் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை. தலித்துகளுக்கு எதிராக இருந்தார்’ என்று அவதூறுகளை அள்ளி வீசி பெரியாரின் மார்பில் முட்டினார்கள்.

இன்னும் சில பிற்படுத்தபப்பட்ட குழந்தைகள், பெரியாரை நேரடியாக விமர்சிக்க தயங்கி, ’திராவிட இயக்கம் என்ன செஞ்சி கிழிச்சிது?’ என்று பெரியாரின் தாடி மயிரை பிடித்து இழுக்கிறார்கள்.

ப.ஜீவானந்ததிலிருந்து, இன்றைக்கு பெரியாரை விமர்சிப்பவர்கள் வரை, தங்கள் கொள்கை என்ன வென்று சொல்லாமல், பெரியாரை விமர்சிப்பதே தங்கள் கொள்கையாக அடையாளப்படுத்துகிறார்கள்.

பெரியாரை விமர்சிக்கக் கூடாதாபெரியார் என்ன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?”

இல்லை. தமி்ழ் நாடு கடவுளையே செருப்பால் அடித்த ஊரு. இங்கு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை.

ஆனாலும் பெரியாரை விமர்சிப்பவர்கள் அவரைத் தாண்டி சிந்தப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது செயல்படவேண்டும். ஆனால், இவர்களோ வரலாற்றை பின்னோக்கி இழுத்து, பெரியாரிடம் சண்டையிட்டு, பார்ப்பனியத்திடமும், இந்து மதத்திடமும், ஜாதிய அபிமானிகளிடமும் சரணடைகிறார்கள்.

பெரியாரை விமர்சித்த ஜீவா, பெரியாரின் தாக்குதலால் சாய்ந்தபோன கம்பராமாயணத்திற்கு முட்டுக்கொடுத்தார். பெரியாருக்கு எதிராக பார்ப்பன பாரதிக்கு காவடி தூக்கினார்.

பெரியாரோடு முரண்பட்டு புதுக்கட்சி உருவாக்கிய அண்ணாத்துரை, பெரியாரின் அரசியல் எதிரியான பார்ப்பன ராஜாஜியோடு தேர்தலில் கூட்டு வைத்துக்கொண்டார்.

பெரியாரை தலித் வீரோதியாக சித்திரித்த குணா, ரவிக்குமார் போன்றவர்கள் அதற்கு மாற்றாக பார்ப்பனியத்தை பரிந்துரைத்தார்கள்.

‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற பெயரில் சுற்றி வளைதது மூக்கை தொடுவதைப்போல், மறைமுகமாக பெரியாரை சீண்டுகிற நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளும், பார்ப்பனியத்தை ஆசையோடு கள்ளப் பார்வை பார்க்கிறார்கள்.

இப்படி பார்ப்பன ஆதரவு நிலைகொண்டு, பார்ப்பனரல்லாதவர்கள் கொடுக்கிற நெருக்கடியை பெரியார் மிகச்சாதரணமாக, பலமுறை தகர்த்திருக்கிறார். மாறாக, பெரியாரை தகர்க்க நினைத்தவர்கள்தான் தகர்ந்து போயிருக்கிறார்கள். மீண்டும் பெரியாரிடமே வந்து மண்டியி்ட்டு மன்னிப்பும் கேட்டு இருக்கிறார்கள்.

***

இதுபோன்ற பெரியார் எதிர்ப்பு-திராவிட இயக்க எதிர்ப்பு சூழல் 1992-93 ஆம்ஆண்டுகளில் தீவிரமாக இருந்தது.

பிரபஞ்சன், ராஜேந்திர சோழன் போன்ற எழுத்தாளர்கள், பார்ப்பன குடும்ப சூழலை பின்னணியாக கொண்டு, பார்ப்பன மொழி நடையில் எழுதப்பட்ட பார்ப்பன இலக்கியங்களை, ‘நவீன இலக்கியங்கள்’ என்று பெயர் சூட்டி, குறிப்பாக மவுனி, சுந்தர ராமசாமி,  மலையாள பிட்டு படத்து கதையான ‘மோகமுள்’ நாவலை எழுதிய தி. ஜானகிராமன் போன்ற பார்ப்பன எழுத்தாளர்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டே –

இன்னொருபுரத்தில் தமிழ் மொழி உணர்வு, அரசியல் விழிப்பபுணர்ச்சி, யார் வேண்டுமானாலும் கவிதை, கதை எழுதலாம், எழுத்தாளராகலாம், பேச்சாளராகலாம், பத்திரிகை நடத்தலாம் அதற்கு பிறப்பின் அடிப்படையில் தகுதியோ,  மொழிப் புலமையோ தேவையில்லை. சமூக அக்கறையும், மொழி உணர்வும் இருந்தால் போதும் என்று இலக்கியத்தை ஜனநாயகப்படுத்திய திக, திமுகவைச் சேர்ந்த திராவிட இயக்க எழுத்தளார்களை கேவலப்படுத்தினார்கள். இதில் பார்ப்பனரல்லாத பிரபஞ்சன் போன்றவர்களின் பங்கும் இருந்தது. ஆனால், பிரபஞ்சனின் பங்கு மிகத் தீவராமாக இருந்தது. (அப்போது ரவிக்குமார் திராவிட இயக்க ஆதரவாளராக, தீவிர பெரியார் பற்றாளராக இருந்தார். எஸ்.வி. ராஜதுரை-வ.கீதாவின் பெரியார் சமதர்மம் நூலை (96ஆம் ஆண்டு) அவர்தான் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.)

‘பெரியார்-மணியம்மை திருமணம் தவறு. அது செல்லாது’ என்கிற பாணியில் மிக கடுமையாக பெரியாரின் இரண்டாவது திருமணத்தை கண்டித்து நக்கீரனில் எழுதினார் பிரபஞ்சன். அவர் எழுதியதை ‘நன்றி பிரபஞ்சன்’ என்று நோட்டிஸ் போட்டுக் கொடுத்தார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்.

ஆக, பார்ப்பன ஆதரவு நிலைகொண்ட பார்ப்பனரல்லாதவர்களின் பெரியார் எதிர்ப்பு அல்லது திராவிட இயக்க எதிர்ப்பு காலபோக்கில் அவர்களாலேயெ கடைப்பிடிக்க முடியாமல் மீண்டும் பெரியாரிடமே வந்து சரணடைந்து விடுகிறார்கள்.  இதற்கு அடிப்படை காரணம், பெரியார் மீது இவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்பதைவிட, பார்ப்பனர்களால் இவர்களுககு காரியம் ஆகவேண்டும் என்பதுதான் முக்கியம்.

பெரியார் எதிர்ப்பாளராக இருந்தால் அந்தக் காரியம் சீக்கிரம் நடக்கும் என்பதுதான் பெரியார் எதிர்ப்பின் உள்ளர்த்தம். அப்படியும் காரியம் நடக்காமல் போனால்……? இருக்கவே இருக்கிறது மீண்டும் பார்ப்பன எதிர்ப்பு.

பெரியார் எதிர்ப்புக்கும், பாரதி அபிமானத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பெரியார் எதிர்ப்பையும் பெரியார் ஆதரவையும் மாறி மாறி செய்கிற இந்த அறிவாளிகள், பெரும்பாலும் பாரதி மீது் அபிமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். காரணம், பெரியார் கருத்துக்களில் தன்னை ஈடுபாடு உள்ளவர்களாக காட்டிக் கொண்டாலும் பாரப்பனர்களோடு சுமுகமாக பழகுவதற்கு பாரதிதான் இவர்களுக்கு கைகொடுக்கிறார். பார்ப்பனர்களிடம் தன்னை முற்போக்காளனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் உறவு முறியக்கூடாது. அப்படியானால் அங்கே பெரியார்-அம்பேத்கர் பற்றியா பேச முடியும்? பேசினால், கை குலுக்கலா நடக்கும்.? கை கலப்புதான் நடக்கும்.

இந்த இக்கட்டில் இருந்து பார்ப்பனரல்லாத அறிவாளிகளை காப்பதற்காகத்தானே,  அவதாரம் எடுத்திருக்கிறான் ஆபத்தாண்டவன் பாரதி. அந்தக் காலத்து ஜீவா முதல் இந்தக் காலத்து திராவிட இயக்க எதிர்ப்பு எழுத்தாளர்கள் வரை இவர்களுக்கு கைகொடுக்கிற ஒரே கடவுள் பாரதி அய்யர்தானே.

***

பெரியாரின் மார்பில் முரட்டுத்தனமாக முட்டி மோதி  பிறகு சறுக்கி, பெரியாரின் பாதத்தில் வந்து விழுந்துவிடுகிறார்கள், பரிதாபத்திற்குரிய பார்ப்பனரல்லாத, இந்த பெரியார், திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.

பார்ப்பனரல்லாத திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பெரியார் மீது வீசிய கேள்விகளை குறித்து,  1993 ல் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நடத்திய ‘இனி’ இதழில் ஒரு கவிதை எழுதினேன்

பிரபஞ்சனின் திராவிட இயக்க எதிர்ப்பு மனோபாவமே, இந்த கவிதையை எழுதுவதற்கு எனக்கு உந்துதலாக அல்லது உள்ளடக்கமாக இருந்தது.

பெரியாரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் அந்தக் கவிதையை இங்கு பிரசுரிக்கிறேன்.

இதை எழுதி 16 ஆண்டுகள் ஆகிறது. அப்போது பெரியாரின்-திராவிட இயக்கத்தின் எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் இப்போது ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அப்போது ஆதரவாளராக இருந்தவர்கள் இப்போது எதிப்பாளராக மாறி இருக்கிறார்கள். இப்போதும் இந்தக் கவிதை பொறுத்தமாக இருக்கிறது. இந்தக் கவிதை எப்போது பொறுத்தமற்று போகிறதோ அப்பபோது் சமூகம் பல படி முன்னேறி இருக்கிறது என்று அர்த்தம். பார்ப்போம்.

***

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

பனை ஏறும்

தந்தை தொழிலில்

இருந்து தப்பித்து

தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்.

***

“பெரியாரின்

முரட்டுத்தனமான அணுகுமுறை

அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”

இதுமுடி வெட்டும் தோழரின் மகனான

எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

***

“என்னங்கபெரியார் சொல்லிட்டா சரியா?

பிரமணனும் மனுசந்தாங்க.

திராவிட இயக்கம்

இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’

பாணியில்கேட்டவர்

அப்பன் இன்னும்

பிணம் எரித்துக் கொண்டிருக்க

இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

சுபமங்களாவை விரித்தபடி

சுஜாதா

சுந்தர ராமசாமிக்கு

இணையாக

இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்

அவருடைய மகன்.

ஆமாம்

அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

***

நன்றி – அண்ணன் மதிமாறன்

செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா? இதுதாண்டா ஜாதி

16 01 2013

படம்

ன் ஜாதி பெண்களை தலித் இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்வது, பணத்திற்காகவும், சொத்துக்களை எழுதி வாங்குவதற்காகவும்தான், என்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.

அப்படியானால்,

பெண்களிடம் வரதட்சிணை வாங்கி அவர்களை சுரண்டித் தின்கிற ஜாதிக்கரான், தன் ஜாதிக்காரனா? தலித்தா?

பார்ப்பானிலிருந்து எல்லா ஜாதிக்காரனும் தன் ஜாதி பெண்களை வரதட்சிணை என்கிற பெயரில் சூறையாடுகிறான்.

இவ்வளவு பணம், இவ்வளவு நகை தந்தால்தான்… என்று பேரம் பேசி, நடக்கிற இந்த மானங்கெட்டத் தனத்திற்கு பெயர்தான் திருமணமா?

இதில் கொஞ்சம் குறைந்தாலோ, பிறகு பண்டிகை, குழந்தை பிறப்பு போன்ற நாட்களில் சீர் செய்ய முடியாமல் போனாலோ அடி, உதை, குத்து என்று தன் ஜாதி பெண்களிடம் செயல்பட்டு தாங்கள் வீரபரம்பரை என்பதை நிரூபிக்கிறார்கள் எல்லா ஜாதிக்காரனும்.

செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா? தன் ஜாதி பெண்களை சுரண்டித் தின்னுப்புட்டு… அப்புறம் என்ன ஜாதி பெருமை வெங்காயம் வேண்டிக்கிடக்கு?

பெண்களுக்கு எதிரான இந்த முறை திருணமங்களில் முஸ்லிம், கிறித்துவர்கள் யாரும் தப்புறத இல்ல..

நீங்க பெரிய முற்போக்கா இருக்கனும்னு சொல்லல.. நீங்க பேசுற வியசத்திற்காவது உண்மையாக இருங்க.

உங்களுக்கு தில் இருந்தா, ‘இனி எவனாவது நம்ம ஜாதி, மத பெண்கிட்ட வரதட்சிணை வாங்குன அவனை சும்மா விட மாட்டோம். இதுக்கு முன்னால வாங்கிய வரதட்சிணையையும் திருப்பிக் கொடு’ என்று சொல்லுங்க.

முடியுமா? முதலில் உங்களாலே வாங்கமா இருக்க முடியுமா? டாக்டருக்கும், இன்ஜினியருக்கும் எவ்வளவு கொட்டி அழுதிருப்பாங்க..

உண்மையில் ஒவ்வொரு ஜாதி இந்து பெண்களும் தன் ஜாதியை சேர்ந்த ஆணாதிக்க வெறியர்களான தன் கணவர்களிடமிருந்து சட்ட ரீதியான பாதுகாப்பை பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்ட மசோதாதான் காரணம்.

அவர் இல்லை என்றால், அந்தக் காலம் மாதிரி, ஒவ்வொரு ஜாதி இந்துவும், ஆளுக்கு நாலு பொண்டாட்டி கட்டிக்கிட்டு நாலு பெண்களின் வாழ்க்கையையும் நாசம் செஞ்சிருப்பானுங்க…

பார்ப்பனப் பெண்களிலிருந்து வன்னியர் பெண்கள் வரை தன் ஜாதி ஆண்களின் கொடுமைகளிலிருந்து ஓரளவுக்கு பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் வாழ்கிறார்கள் என்றால் அது அண்ணல் அம்பேத்கரால்தான்.

அது சரி.

‘சொத்துக்கு ஆசைப்பட்டு, நம்ம வீட்டு பெண்களை காதல் கல்யாணம் செய்கிறார்கள்’, என்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.

பெண்களுக்கு எந்த ஜாதி இந்து சரிபாதியா சொத்துக் கொடுக்குறான்? எல்லா சொத்தையும் மகன்களுக்குத்தானே எழுதி கொடுக்குறான்.

தன் பெண்களுக்கு செலவு செய்து திருமணம் செய்கிறான். சீர் செய்கிறான் அவ்வளவுதான். சொத்துல பங்கு கேட்டால் கூட கொடுப்பதில்லை.

இன்னும் சரியாக சொன்னால், ஆணாதிக்க சமூக அமைப்பில், காதல் திருமணத்தில் ஈடுபடுகிற ஆணுக்கு பொருளாதார நஷ்டமும். பெண்ணுக்கு லாபமும்தான்.

பெண்ணை பெற்றவர்களுக்கு காதல் திருமணம் ஒரு வரப்பிரசாதம்.

வறுமையில் இருக்கிற ஒரு ஜாதி இந்து, தன் ஜாதிக்குள்ளேயே தன் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், மிகக் குறைந்தது 3 லட்சமாவது உடனடியாக தேவை.

மாறாக, அந்தப் பெண் தலித் இளைஞரையோ, வேறு ஜாதிக்காரரையோ காதல் திருமணம் செய்து கொண்டால், அந்த செலவு மிச்சம்.

ஆனால், மாப்பிள்ளை தலித்தாக இருந்தால், தன் பொருளாதார லாபத்தை விடவும், இந்தத் திருமணம் தனக்கு மிகப் பெரிய அவமானமாக கருதுவதான் ஜாதி இயங்கும் தன்மை.

அப்படித்தான் இப்போதும் இயங்குகிறார்கள், தலித் விரோதிகள்.

நன்றி : – அண்ணன் மதிமாறன் 

குவைத்தில் 2 நாள் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி – 14ம் தேதி தொடங்குகிறது

13 12 2012

குவைத்: குவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி 2012 டிசம்பர் 14-15 (வெள்ளி,சனி)ஆகிய இரண்டு நாள் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு பொறியாளர் குழுமமும், பொங்குதமிழ் அறக்கட்டளையும் செய்துள்ளன. ஃபிந்தாசு அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் தமிழர்களின் மரபுவழி வாழ்க்கையை நினைவூட்டும் காட்சிப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. தமிழர் பண்பாட்டுக் கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் குறித்தும், தமிழர் பண்பாட்டு வாழ்க்கை குறித்தும் உரையாற்ற உள்ளார்.அதுபோல் தமிழ் இணையப் பயிலரங்கத்திலும் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சியை அறிமுகப்படுத்த உள்ளார். பாலை திரைப்படம் கண்காட்சியில் தமிழர்களின் பண்டைய வாழ்க்கையை நினைவூட்டும் பாலை திரைப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் இசைப்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன. கண்காட்சித் திறப்புவிழாவின் வரவேற்புரையை குரு. முத்துக்குமார் வழங்குகின்றார். இலட்சுமி நாராயணன் அறிமுக உரையாற்றுகின்றார். தமிழர் பண்பாடு குறித்து வளநாடன், செந்தமிழ் அரசு, இராவணன் உரையாற்றுகின்றனர். சிலப்பதிகாரம் குறித்து பழ.கிருட்டிணமூர்த்தி சொற்பொழிவாற்றுகின்றார்.

குவைத்தில் வாழும் பொறியாளர்கள் பலர் உரையாற்றுகின்றனர். விற்பனைக்கு கும்பகோணம் டிகிரி காபி, கூழ் அரங்கில் கும்பகோணம் டிகிரி காபி, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கூழ், போன்றவையும் எலுமிச்சை சோறு, சாம்பார் சோறு உள்ளிட்ட உணவுகளும் விற்கப்படும். வெற்றிலைப் பாக்கு, சுக்கு காபி பானகம், மூலிகைக்குடிநீர் போன்றவை இலவசமாக வழங்கப்படும். பழங்குடியினர் ஓவியங்கள், குறுந்தகடுகள், மென்பொருட்கள், நூல்கள் வாங்கக் கிடைக்கும். 2000க்கும் மேற்பட்ட படங்கள், தமிழகக் கலைப்பொருட்கள், உழவுக்கருவிகள், விளையாட்டுப் பொருட்கள், பனை ஓலைப்பொருட்கள் உள்ளிட்ட தமிழர் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் விளக்கும் விதம்விதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும். ஏராளமான நூல்களின் அணிவகுப்பு கண்காட்சிக்கு வருகை தரும் தமிழ்நாடு பொறியாளர் குழுமம், பொங்குதமிழ் மன்றத்தின் உறுப்பினர்களுக்குத் தமிழ் மருத்துவம் என்ற நூல் இலவசமாக வழங்கப்படும். பல்வகைக் குறுந்தகடுகளும் சிறுநூல்களும் கண்காட்சியில் வெளியிடப்படும், பயனுள்ள பலசெய்திகளை உள்ளடக்கிய கண்காட்சி மலர் வெளியிடப்படும். கண்காட்சி காலை 10மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு நாளும் நடைபெறும். அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடன், சேது மாதவன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

மாநாடு கண்காட்சி தொடர்பான மேலும் தகவல்களுக்கு குவைத் தொடர்பு எண்கள்: தமிழ்நாடன்: 6685 2906, சேது மாதவன்: 65094097

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 8

8 10 2012
 1. 1959 – கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறப்பு.

  1967 – தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைதானார்கள்.

  2005 – காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர்.

11 07 2012

919: நெதர்லாந்தில் எட்டு மணித்தியால வேலைநாளும், ஞாயிறு விடுமுறையும் சட்டமாக்கப்பட்டது.

1921: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி வில்லியம் ஹோவார்ட் டவ்ட,; அந்நாட்டின் பிரதம நீதியரசராக பதவியேற்றார். இவ்விரு பதவிகளையும் வகித்த ஒரே நபர் அவராவார்.

1950: சர்வதேச நாணய நிதியத்தில் பாகிஸ்தான் இணைந்தது.

1972: முதலாவது உலக சதுரங்க சம்பியன்ஷிப்போட்டி நடைபெற்றது.

1973: பாரிஸில் நடந்த விமான விபத்தில் 134 பேர் பலி.

1978: ஸ்பெய்னின் டரகோனா நகரில் எரிவாயு ஏற்றிச்சென்ற லொறியொன்று வவிபத்துக்குள்ளாகி வெடித்ததால் 216 சுற்றுலா பயணிகள் பலி.

1987: அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையமான ஸ்கைலாப், பூமிக்குத் திரும்பும் போது உடைந்து சிதறி இந்து சமுத்திரத்தில் விழுந்தது.

1991: சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 261 பேர் பலி.

1995: கியூப விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 44 பேர்பலி.

1995: ஸ்ரேபிரேனிக்கா படுகொலைகள்: ஜூலை 11 முதல் 22 ஆம் திகதிவரை  பொஸ்னியாவில் 8000 பொஸ்னிய முஸ்லிம்கள் சேர்பிய படையினரால் கொல்லப்பட்டனர்.

2006: மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்புகளால் 209 பேர் பலி.

விஜயகாந்த்: தமிள்ல எனக்கு புடிக்காத வார்த்தை ஜனாதிபதி (எழுத்து பிழை அல்ல)

21 06 2012

நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளும், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கையில், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருக்கிறார் விஜயகாந்த். “யார் ஜனாதிபதியாக வந்தாலும், தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை” என்பது அவரது கருத்து.

நமது ஜனாதிபதியால் யாருக்காவது, எந்த பயனும் இருப்பதாக, இதுவரை யாரும் இதுவரை சொன்னதில்லை. அப்படியான நிலையில், அவரால் தமிழகத்துக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என விஜயகாந் கூறுவது தமாஷாக உள்ளது. விஜயகாந்தின் கூற்றைப் பார்த்தால், வேறு யாருக்கோ அவரால் (ஜனாதிபதியால்) ஏதோ பலன் கிடைக்கப் போகிறது என்பது போலல்லவா சவுன்ட் பண்ணுகிறது?

ஜனாதிபதியால், ஜனாதிபதிக்கு மட்டுமே பயன் என்பதே, இதுவரை நடைமுறை.

சரி. நம்ம கேப்டன் என்னதான் சொல்ல வருகிறார்?

“காவிரியாற்றில் தண்ணீர் திறந்துவிட, கர்நாடகா மறுப்பது, 40 ஆண்டுகளாக தொடர்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை, 20 ஆண்டுகளுக்கு மேலாக தீரவில்லை. அட்டப்பாடியிலும் அணை கட்ட, கேரளா முயற்சிக்கிறது. நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரிக்கு தண்ணீர் திறந்துவிட, கேரள அரசு மறுக்கிறது.

பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிப்பதையும், தடுக்க முடியவில்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததால், தமிழக மீனவர்களும், நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை. சீனர்கள் ஆட்சி நடத்தும் சிங்கப்பூரில் கூட, ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது. ஆனால், இந்தியாவில் ஆட்சி மொழியாக, தமிழ் இன்னும் இடம் பெறவில்லை.

இதனால்,, யார் ஜனாதிபதியாக வந்தாலும், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில், கலந்துகொள்ளாமல் இருப்பதே, தமிழகத்திற்கு செய்யும் நன்மையாகும். ஆகவே, எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க, தே.மு.தி.க., தீர்மானித்துள்ளது” என்கிறது அவரது அறிக்கை.

கேப்டன் சொல்லும் விஷயங்கள் எதிலும் முடிவெடுக்க முடியாத ஒரு டம்மி பதவிதான், ஜனாதிபதி! மேலே குறிப்பிட்ட அனைத்தும், மத்திய அரசின் கைகளில் தங்கியுள்ள விவகாரங்கள். கேப்டன் புறக்கணிப்பதென்றால், லோக்சபா தேர்தலைதான் புறக்கணிக்க வேண்டியிருக்கும்!