61 ஆண்டு கால தமிழர் படுகொலை வரலாறு: ஒரு முழுமையான தொகுப்பு

23 05 2009
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசு தலைமையில் மேற்கொள்ளப்படும் neshorஇன அழிப்பு வரலாறு நீண்டது. பல வடிவங்களில் முன்னெடுக்கப்படும் இந்த இன அழிப்பில் முதன்மையான வடிவமாக இருந்து வருவது நேரடியான படுகொலைகளாகும். இந்த படுகொலைகளின் அத்தியாயங்கள் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.

 

இவ்வாறாக கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரியவைகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்து வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) ஒரு தொகுப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த படுகொலைகள் நடைபெற்ற சூழ்நிலைகள், அவை தொடர்பான சாட்சியங்கள் என்பன முடிந்த அளவிற்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

அந்த சாட்சியங்கள் தாம் நேரடியாகப் பார்த்ததாகக் கூறிய விடயங்கள் மட்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப் படுகொலைகளின் சில பகுதிகளை மட்டுமே ஒரு சாட்சி கண்ணால் பார்த்திருக்க முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்த படுகொலைகள் எங்கு நடைபெற்றன என்பது தொடர்பான வரைபடமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் – படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர என மக்களால் எழுப்பப்பட்ட நினைவு கட்டடங்களின் படங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் இறுதி பக்கங்களில் – படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஓவ்வொரு படுகொலைகள் தொடர்பான உண்மையான பல தகவல்களை மேலும் விபரமாக ஆராய்வதாக இருந்தால் அதற்கு மேலதிக நேரமும், தகவல்களும் தேவை. ஆனால், போர் தொடர்ந்து நடைபெற்று வருவதனால் அவற்றை இப்போது செய்வது கடினமானது.

இருந்தாலும் தற்போதைய சூழலில் எந்த அளவுக்கு முழுமையாகத் தகவல்களைத் திரட்ட முடியுமோ அந்த அளவுக்கு முழுமையாக தகவல்கள் இங்கே திரட்டப்பட்டுள்ளன.

வெளி இணைப்பு: 61 அண்டு கால தமிழர் படுகொலை வரலாற்றுத் தொகுப்பு





கொழும்பு சென்றிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் கண்டியில் மகிந்தவுடன் பேச்சு

23 05 2009
tesj8ஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான சிறப்பு வானூர்தி மூலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11:30 நிமிடமளவில் கொழும்பைச் சென்றடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று காலை கண்டி சென்று அங்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார்.

 

அதன் பின்னர், வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களைச் சென்று பார்வையிடுவதுடன், போர் நடைபெற்ற பகுதிக்கும் நேரில் செல்லவிருக்கின்றார்.

இதனை முன்னிட்டு கொழும்பு, கண்டி மற்றும் வவுனியா நகர்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தனது பயணத்தின் போது, விடுதலைப் புலிகள் மீதான போரில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கான அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற சிறிலங்கா அரசுக்கு இந்த பயணம் உதவக்கூடும் என்பது குறித்து பான் கீ மூன் மிகவும் விழிப்புடன் இருக்கிறார் என்று ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த வெற்றியின் ஒரு பகுதியாக தாம் இருக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்து கொள்ள அவர் முயல்வார் என அவருடன் பயணிக்கும் பிபிசியின் செய்தியாளர் லாரா ட்ரெவ்லீன் கூறுகிறார்.

போரின் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்போது அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் முகாம்களில் தங்கியுள்ள சுமார் மூன்று லட்சம் மக்கள், அதிலும் குறிப்பாக பெரும்பாலானவர்கள் தமிழ் மக்கள் என்கிறதன் பின்புலத்தில், அவர்களுக்கு தேவையான மனிதாபிமான தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் அவரது பயணத்தின் பிரதான நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முகாம்கள் இராணுவத்தால் நடத்தப்படக்கூடாது என்று கூறும் ஐ.நா.வின் அதிகாரிகள் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனை தனது பேச்சுக்களின் போது ஐ.நா. செயலாளர் நாயகமும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போரில் சிறிலங்கா அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது சமாதானத்தை வென்றெடுக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதையும் பான் கீ மூன் அரசுக்கு நினைவூட்ட எண்ணியுள்ளார் எனவும் ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டில் தமிழ் மக்களும் சம பங்காளிகள் என அவர்கள் எண்ணும் வகையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





பிரபாகரன் மனைவி, மகள் மரணம் அடையவில்லை

23 05 2009
tesj8விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, 2-வது மகன் பாலச்சந்திரன் ஆகிய மூவரும் இங்கிலாந்தில் பாதுகாப்புடன் உள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக அதிகார பூர்வமற்ற ஒரு தகவல் கடந்த புதன்கிழமை வெளியானது. 
பிரபாகரன் உடல் கிடந்த நந்திக்கடல் கழிமுக பகுதியில் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டதாக இராணுவத்தின் 56-வது படையணி கூறியது.பிரபாகரன் உடல் கிடந்த இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அந்த உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது சிங்கள இராணுவத்தின் ஏமாற்று வேலை என்று உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பிரபாகரன் உடல் கிடந்ததாக கூறப்படும் நந்திக்கடல் பகுதியில் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு எப்படி மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் உடல்கள் அன்றைய தினம் கிடைக்காமல் போனது என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து பிரபாகரன் மனைவி குறித்து வெளியிடப்பட்ட தகவல் தவறானது என்று சிங்கள இராணுவம் ஒத்துக்கொண்டது.

இது தொடர்பாக சிங்கள இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா கொழும்பில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்களது உடல்கள் எதையும் இராணுவம் மீட்கவில்லை.

இராணுவத்திடம் 4 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நடேசன், புலித்தேவன் இருவரும் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போது சுட்டுக் கொல்லப்படவில்லை. இராணுவத்துடன் சண்டையிட்ட அவர்கள் இறந்தனர்.

கடைசி நாள் போரில் இராணுவமும் பலத்த உயிரிழப்பை சந்தித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். எத்தனை ஆயிரம் சிங்கள வீரர்கள் பலியானார்கள் என்று கேட்டதற்கு உதய நாணயகாரா பதில் அளிக்க மறுத்து விட்டார்.

சிங்கள இராணுவத்துக்கு 40 ஆயிரம் வீரர்கள் தேவை என்று அரசு சார்பில் கடந்த 2 நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது, முல்லைத்தீவு சண்டையில் பல்லாயிரக்கணக்கில் வீரர்களை சிங்கள இராணுவம் இழந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

pirapakaran_mathivathani

முல்லைத்தீவு நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: சிங்கள இராணுவம் சொல்கிறது

இலங்கை முல்லைத்தீவில் உள்ள நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாக இராணுவம் அறிவித்தது.

பிரபாகரன் உடலை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு துரோகம் செய்து, அமைச்சர் பதவி பெற்றுள்ள கருணாவை அழைத்து வந்து அடையாளம் காண வைத்தனர்.

கருணாவும் அந்த உடலை பார்த்து விட்டு இது பிரபாகரன் உடல்தான் என்றார்.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் உறுதியுடன் தகவல் வெளியிட்டனர். பிரபாகரன் எப்படி தப்பிச்சென்றார் என்ற முழு விபரமும் நேற்று வெளியானது. இதனால் பிரபாகரன் தொடர்பாக மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில் பிரபாகரன் உடலை எரித்து விட்டோம் என்று சிங்கள இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரபாகரன் உடலை இராணுவம் கைப்பற்றியது. அந்த உடம்பில் இருந்து பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துள்ளோம். இது பிரபாகரன் உடல்தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனி பிரபாகரன் உடல் தொடர்பாக எந்த டி.என்.ஏ. சோதனையும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம். அவரது உடல் மீட்கப்பட்ட நந்திக்கடல் பகுதியிலேயே இந்த தகனம் புதன்கிழமை நடந்தது.

பிரபாகரன் உடலுடன் அவரது சகாக்களின் உடல்களும் முழுமையாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிரபாகரனும் அவரது சகாக்களும் தப்பிச் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.

பிரபாகரன் உடலை எங்கள் டி.வி.குழுவினர் படம் பிடித்துள்ளனர். கருணாவும், தயா மாஸ்டரும் உறுதி செய்துள்ளனர். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இவ்வாறு பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.





இராணுவ முகாம்களில் பெண்கள் கற்பழிப்பு, ஆண்கள் காணாமற் போகிறார்கள்:

22 05 2009

sky_logoசிறிலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கப்படும் தமிழ்ப் பெண்களை இராணுவம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதாக பிரித்தானியா ஊடகமான ஸ்கை செய்திகளுக்குச் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன

சிறிலங்கா அரசினது இவ் முகாம்களில் பெண்கள் பலர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், இளைஞர்கள் பலர் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்படுவதாகவும் பல அறிக்கைகள் கூறுகின்றன என்று ஸ்கைச் செய்திகள் குறிப்பிட்டுள்ளது.

 

40க்கும் மேற்பட்ட முகாம்களில் 200,000க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இவற்றிற்குள் செல்ல பல உதவி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென்றும், ஆனால் இவ்முகாம்களுக்குள் சுதந்திரமாகச் சென்று மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான வசதிகளை, அராசங்கம் செய்யவேணடும் எனக் கோருவதற்காக, ஐ.நா. பாதுகாப்பு குழுவின் செயலாளர் நாயகம், பான் கி முன் அவர்கள், சிறிலங்காவுக்கு பயணம் செய்துள்ளதாகவும், அச்செய்தி தெரிவித்துள்ளது.

ஸ்கைச் செய்திகளோடு கதைத்த, பெயர் குறிப்பிட விரும்பாத, ஒரு பெண் ‘முகாம்களில் பல பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் மற்றும் இளைஞர்கள் பலர் காணாமற்போவதாகவும், அவர்களின் விபரங்கள் பின்பு கிடைக்காமலே போகிறது’ எனவும் கூறியுள்ளார்.

“எங்களை ஆதரிக்கவும் தற்காப்புத் தருவதற்கும் யாருமே இல்லையென்றே நாங்கள் வருந்துகிறோம் என்றும், தனிமைப்பட்டுள்ளதாகவே நாம் உணருகின்றோம்” எனவும் பெண் ஒருவர் ஸ்கைச் செய்திளோடு கதைக்கும் போது தெரிவித்துள்ளார்.





தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்: விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறை

22 05 2009
08-prabhakaran-200தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அறிவழகன் ‘தமிழ்நெட்’ இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணாத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஆதரவுக்குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர்.





முல்லை காட்டுக்குள் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் – புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

21 05 2009

05முல்லை வன பகுதியில் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

 





பிரபாகரன் இல்லாத தமிழர்கள் சிங்கள கொத்தடிமைகள் தான்:

21 05 2009
refugee_india4பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழர்களை இலங்கை அடிமைகளாக்கி விடும்; ஆந்திரா தப்பி வந்த அகதிகள் – இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகள், விஷக்குண்டுகள் வீசியது. இதில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர்…..
பலியானார்கள். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கை-கால்களை இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போரின்போது இலங்கையின் வடபகுதியில் உள்ள சவுதாலாவை சேர்ந்த கிருஷ்ணவேணி, சுகன்யா உள்ளிட்ட 15 பேர் படகு மூலம் ஆந்திரா தப்பி வந்தனர். அவர்கள் கூறியதாவது :

இலங்கையில் நடந்த போரில் சிங்களர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்று விட்டதாக சொல்கிறார்கள். இதை நாங்கள் நம்பமாட்டோம். பிரபாகரன் இலங்கை தமிழர்களின் கடவுள். அந்த கடவுளுக்கு மரணமே கிடையாது. காரணம் என்னைப் போன்ற பெண்கள் இலங்கை மண்ணில் பாதுகாப்பாக வாழ வழி ஏற்படுத்தியது அவர்தான்.

நாங்கள் பள்ளியில் படிக்கும்போதுகூட சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை மிகவும் கேவலமாக நடத்துவார்கள். தமிழர்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் சிங்கள ரவுடிகள் புகுந்து பெண்களை கற்பழிப்பார்கள். வீடு, வீடாக வந்து ஆயுதங்களை காட்டி பணம் – நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விடுவார்கள்.

அவர்கள் மீது சிங்கள போலீசாரிடம் புகார் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். மாறாக புகார் கொடுத்த தமிழர்களை எங்கள் இனத்தவர் மீதான புகார் கொடுக்கிறாய். உனக்கு எவ்வளவு தைரியம்? என்று அடித்து உதைத்து விரட்டி விடுவார்கள். இல்லையென்றால் புகார் கொடுத்தவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளி விடுவார்கள்.

இதனால் சிங்கள ரவுடிகள் கற்பழிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டால்கூட அங்குள்ள போலீஸ் நிலையங்களில் எங்களால் புகார் கொடுக்க முடியாது. சிங்களர்களின் இந்த தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பிரபாகரன். அவர் இருக்கும் வரைதான் அங்கு தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். அவர் இல்லாவிட்டால் சிங்கள அரசு தமிழர்களை மீண்டும் அடிமைகளாக மாற்றிவிடும்.

பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவர் இறந்து விட்டதாக சிங்கள ராணுவம் பொய் பிரசாரம் செய்து வருகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களின் கடவுள் பிரபாகரன். அவரது படத்தை வைத்துதான் நாங்கள் வழிபாடு நடத்தி வருகிறோம். தமிழர்களின் காவல் தெய்வமான அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினர்.





பிரபாகரன் தப்பித்துச் சென்றது எப்படி? – நக்கீரன் புலனாய்வுக் கட்டுரை!

21 05 2009

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். [cid:image004.jpg@01C9DA02.2390C610] <http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/2270.jpg>

image004 

நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித் துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர். [cid:image005.jpg@01C9DA02.2390C610]

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

புலிகளின் அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப் பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

-காமராஜ்

இணையாசிரியர்,

நக்கீரன்





புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு!

21 05 2009

nerudal-ltte-fighters-1புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு!

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்.
புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்
களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 30க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள்

5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள்

புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

“மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

கமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.





எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம்.

20 05 2009
                        14இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை

தமிழீழம் 19.05.2009 எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம்.

அன்பு மிக்க எம் உறவுகளே!
60 வருடகால நீண்ட மிகப்பெரிய போராட்டத்தின் மூலமாக எம் தமிழர் தேசம் தனக்கான சுயமான போராட்ட சக்தியாக மாறியுள்ளது.

இன்று சர்வதேசம் எங்கும் எமது தேசம் தொடர்பாகவும் தமிழீழ தமிழர் பற்றிய பிரச்சினைகளையும் அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கின்றதனையும் உலகம் அறிந்துள்ளது.

சொந்த காலில் சுயமாக கட்டியெழுப்பப்பட்ட எமது விடுதலைப் போராட்டத்தினை அழித்து எமது போராட்டத்தினை தாம் விரும்பியவாறு பயன்படுத்த அண்டை நாடுகளும் சர்வதேசமும் போட்டிபோட்டுக் கொண்டுசெய்த சூழ்ச்சிகளை எமது தலைவர் அவர்கள் கடந்த 30 வருடங்களாக உடைத்தும் தகர்த்தும் உத்வேகத்துடன் முன்னெடுத்து வந்துள்ளார்.

இன்றுவரை எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் போகாது சுயமாக நின்று போராடியதனால்தான் நாம் அனைவரும் தமிழீழ தேசம் என்ற ஒரே குடையில் நிமிர்ந்து நிற்கின்றோம்.

இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் எமது தாயகம் தன்னாட்சி சுய உரிமை என்று தன் அடிப்படையில் எமக்கான உரிமைகளை வழங்க முற்படுவதற்கு மாறாக தாம் விரும்பிய தீர்வுகளை தரமுற்பட்டது.

அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத தீர்வுகளை வழங்கி எமது சுயநிர்ணய உரிமையினை எப்படி முடக்கி அடக்கி எமது தாயக பூமியை சிங்கள பூமியாக மாற்றலாம் என திட்டமிட்டு செயற்பட்டது.

தொடர்ந்தும் இவ்வாறான அரைகுறை தீர்வுகளை வழங்குவதன் ஊடாக எமது முனைப்பு பெற்ற ஆயுத போராட்டத்தினை மழுங்கடிக்க முயற்சி செய்தது.

காலத்திற்கு காலம் சிங்கள அரசு எமது நியாயமான போராட்டத்தினை மறுதலித்து அதற்கு மாறாக ஓர் இனப்படுகொலையினை எம் மக்கள் மீது ஏவி விட்டுக்கொண்டிருந்தது.

இந்த இனப்படுகொலையினை அரசாங்கம் குடியேற்றம் என்றும் அபிவிருத்தி என்றும் பயங்கரவாதம் என்றும் புதிய புதிய வார்த்தைகளில் சர்வதேசத்தின் உதவியுடன் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் செய்துகொண்டிருந்தது.

இறுதியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற இன அழிப்பு ஆயுதத்தினை எடுத்து சர்வதேச ரீதியான அங்கீகாரத்துடனும் அயல் நாடுகளின் வழிகாட்டுதலுடனும் ஓர் மிகப்பெரிய இன அழிப்பு போரினை அனைத்து சர்வதேச மனிதாபிமான நெறிமுறைகளையும் மீறி செயற்படுத்திக் கொண்டிருந்தது சிங்கள தேசம். எமது தேசியத்தலைவர் அவர்கள் சிங்கள அரசின் இந்த இன அழிப்புப் போரினை உலகுக்கு தெரியப்படுத்திக்கொண்டே தமிழீழ மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாப்பதற்கான தற்காப்பு போரை நடாத்திக்கொண்டிருந்தார்.

ஆனால் சர்வதேசம் இனப்படுகொலைக்கான எத்தனையோ சாட்சியம் இருந்தும் பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்குள் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் ஆயிரக்கணக்கான உயிர்களையும் முழுங்கியவாறு கண்மூடித்தனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த இக்கட்டான நிலையில்தான் எமது தலைமை மக்களை காக்கும் இறுதி முயற்சியாக ஆயுதப்பாவனையை நிறுத்துவதாகவும் உடனடியாக மக்களை பாதுகாக்குமாறும் சர்வதேசத்திடம் கேட்டுக்கொண்டது.

ஆனால் சர்வதேசத்தின் மௌனம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவுகொண்டு விட்டது. இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை துடைதத்தழித்து விட்டோம் என்ற இறுமாப்பில் சிங்கள தேசமும் அதன் கூட்டாளிகளும் ஆரவாரித்துக்கொண்டிருக்க தாயகமும் புலம்பெயர் தமிழர் தேசமும் துயரத்தில் மூழ்கி நிற்கின்றனர்.

20 ஆயிரத்திற்கும் அதிமான மாவீரர்கள் ஒரு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் ஆகியவற்றின் இழப்புக்கள் தியாகங்கள் அனைத்தும் வீண் போகாது வீண்போகவும் விடமுடியாது.

கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொள்வோம். மீண்டும் ஒருங்கிணைந்து எமது இலட்சியத்தினை அடைவதற்காய் போராடுவோம்.

கணிசமான போராளிகளையும் மக்களையும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் இழந்தது. உலகெங்கும் வாழும் எம் உறவுகளிற்கு பெரும் துயராக இருக்கும். எனினும் துயரங்களை சுமந்து பயணங்களை தொடர்வோம்.

தமிழீழ தேசம் மட்டுமன்றி உலகெங்கும் விரிந்தும் பரந்தும் இருக்கின்ற மக்கள் போராளிகள் எமது தலைமையின் வழிகாட்டுதல்களின் கீழ் மீண்டும் விருட்சமாக தோன்றி; எமது மக்களுக்கான உரிமை கிடைக்கும்வரை போராடுவோம். போராட்ட வடிவம் மாறலாம் போராட்ட இலக்கு மாறாது என்ற தலைவரின் சிந்தனையுடன்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
நன்றி
வணக்கம்
போராளி கே.பி.அறிவன்.

Tamileela Letter 19.05.2009.pdf