பிரபாகரன் திடசங்கற்கம் பூண்டுள்ளார்: பா. நடேசன்

7 04 2009

சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க புலிகளின் தலைவர் பிரபாகரன் திடசங்கற்கம் பூண்டுள்ளார்: பா. நடேசன்

thalaiதமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை இடையறாது முன்னெடுக்க தமிழீழு விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அதன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் தெரிவித்துள்ளார்.
1985ம் ஆண்டு பூட்டானின் தலைநகர் திம்புவில் முன்வைக்கப்பட்ட சமாதானத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
தயார் நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜனசக்தி தமிழ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க இராணுவத்துடனான யுத்தத்தை பிரபாகரன் மிகுந்த தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இந்திய தேர்தல்களின் போது இந்திய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அவர்
தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் மீது விடுதலைப் புலிகளின் தலைவர் பேரபிமானம் கொண்டுள்ளதாகவும், தமிழக மக்களே எமது பலம் எனவும் நடேசன் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்கள் எதிர்நோக்கி வரும் பாரிய மனிதப் பேரவலம் குறித்து இந்திய மத்திய அரசு பாராமுகமாய் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்

7 04 2009

001விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது. இவ் எரி நச்சுவாயுவை சுவாசித்து தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள். இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது. மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.

013

போராளி ஒருவர் மீது நேரடியாக எரி நச்சுக்குண்டு பட்டு அவரின் உடல் கருகியதை படத்தில் காணாலாம்

021

எரி நச்சுக்குண்டு பட்டு உடல் எரிந்த நிலையில் இறந்துகிடக்கும் போராளிகள்

031