தேசியத் தலைவரின் தந்தைக்கு நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வணக்கம் செலுத்தினர்.

11 01 2010

தேசியத் தலைவரின் தந்தைக்கு நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வணக்கம் செலுத்தினர். நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் வட்வெட்டித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தில் இருந்து வருகைதந்த திருமாவளவன், சட்டவாளர் சந்திரசேகரன் உட்பட பலரும் வணக்கம் செலுத்தியுள்ளனர்.நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி வரை தீருவில் சதுக்கத்தில் மக்கள் வணக்கத்திற்காக உடலம் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசியத் தலைவரின் இல்லத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு இந்துமுறைப்படி ஈகைக்கிரிகைகள் இடம்பெறவுள்ளது.இறுதியாக வட்வெட்டித்துறை பொதுமயானத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு தகனம் பிரபாகரன் தாயார் இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டும்: வலுப்பெறும் கோரிக்கைகள்இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை ராணுவம் பிடித்து சென்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி ஆகியோர் கொழும்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார். வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வல்வெட்டி துறையில் இன்று நடக்கிறது. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ராணுவ தடுப்பு காவலில் இருந்து திடீரென விடுதலை செய்யப்பட்டார். கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் வல்வெட்டி துறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் அவதிப்படுகிறார். அவருக்கு தேவையான அதிநவீன சிகிச்சைகள் இந்தியாவில் உள்ளன. எனவே சிகிச்சைக்காக அவர் இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் எம்.பி.யும், அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர், ‘’இலங்கையில் உள் நாட்டு போர் நடந்தபோது கடந்த 1980-ம் ஆண்டுகளில் பார்வதியும் அவரது கணவர் வேலுப்பிள்ளையும் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் தங்கி இருந்தனர். இலங்கை அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தபோது போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பினார்கள்.இவரது மகள்களில் ஒருவரான ஜெகதீஸ்வரி மதியாபரணம் தமிழ்நாட்டில் தான் தங்கியுள்ளார். எனவே, அவரை சிகிச்சைக்காக இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். அவருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்து விட்டால் கொழும்பில் வைத்து இவருக்கு சிகிச்சை அளிப்பேன். அதற்கு இலங்கை அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.பிரபாகரனின் தாயார் பார்வதியை சிகிச்சைக்காக இந்தியா வர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபாகரன் தாயாரை என் வீட்டில் வைத்து பராமரிப்பேன்: வைகோ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு இலங்கையில் அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நடைபெற்றது.இது தொடர்பாக மதிமுக தலைமை அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,’பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது. பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்றும் வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செயற்பாடுகள்

Information

பின்னூட்டமொன்றை இடுக