தளபதி கைது: சென்னையில் ‘கொதிப்பதால்’, மதுரையில் போலீஸ் அதிரடி!

19 06 2012

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மதுரையில் அழகிரியின் தளபதிகளில் ஒருவராக செல்வாக்குடன் வலம்வந்த கோ.தளபதி, நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். சிறைவாசம் ஒன்றும் அவருக்கு புதிதல்ல. காரணம், கைது செய்யப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் அண்ணன் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

மதுரையில் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததுதான் தளபதி மீதுள்ள குற்றச்சாட்டு.

ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததும், நில அபகரிப்பு வழக்குதான். அந்த வழக்குக்காக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தளபதி, ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தார். நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. அதையடுத்து, கடந்த சனிக்கிழமை வெளியே வந்திருந்தார்.

ஜாமீனுக்காக கோர்ட் நிபந்தனைகளில் ஒன்று, மதுரையை விட்டு எங்கும் போய்விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தினமும் நீதிமன்றம் வந்து கையெழுத்திட வேண்டும். அந்த வகையில் மதுரை நீதிமன்றத்துக்கு தளபதி ஆட்டோகிராஃப் போடுவதற்காக நேற்று வந்த போது, நீதிமன்றத்தில் அவருக்காக போலீஸ் காத்திருந்தது.

தளபதிக்காக போலீஸ் காத்திருப்பது ஒன்றும் புதிய விஷயமில்லையே. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அவரது வீட்டு வாயிலில் காத்திருக்காத போலீஸா?

ஏதோ பழைய விசுவாசத்தில் தம்மைப் பார்க்க போலீஸ் வந்திருக்கிறது என்று நினைத்த தளபதி, போலீஸை பார்த்து விஷ் பண்ணிவிட்டு, அலுவலகத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தால்… ஆஹா இது வேறு விஷயம்.

லபக்கென்று அவரை வாரிப் போட்டுக் கொண்டு போய், மீண்டும் சிறையில் அடைத்து விட்டார்கள்.

தளபதியை மீண்டும் கைது செய்தால், செய்தியாளர்கள் குடைவார்கள் என்று புரிந்து வைத்திருந்த மதுரை போலீஸ், கைதுக்கான காரணம் பற்றிய விபரங்களை பக்காவாக தயார் பண்ணி வைத்திருந்தது. அந்த வழக்கின் பின்னணி என்ன, எப்போது நடந்தது, எங்கே நடந்தது என பரீட்சைக்கு தயார் செய்வது போல விரல் நுனியில் விபரங்களை வைத்திருந்தார் மதுரை புறநகர் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

கடந்த வருடம் அ.தி.மு.க. ஆட்சி துவங்கிய புதிதில், மதுரையில் தி.மு.க.-வினரை தேடிதேடி கேஸ் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், சில மாதங்களின் பின் போர் அடித்ததோ, என்னவோ, காவல்துறை தமது வேகத்தைக் குறைத்துக் கொண்டது.

கடந்த வாரம், மே(லி)டத்திடம் இருந்து, டோஸ் வந்ததாக சொல்கிறார்கள். “மதுரையில் கைது செய்யப்பட்ட தி.மு.க.-வினர் அனைவரும் ஒவ்வொருவராக வெளியே வருகிறார்கள்.. நீங்க என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?”

அதையடுத்து மீண்டும் ஆக்ஷன் துவங்கி விட்டதாக மதுரை தி.மு.க.-வினர் ஆடிப் போயுள்ளனர்.

Advertisements
பாரதி தெரிந்த கவிஞன் தெரியாத பார்பனன் – 2

18 06 2012

இரண்டாவது அத்தியாயம்

fuga.jpg

‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்,

-என்று பார்ப்பனர்களையே சாட்டை எடுத்து விளாசி இருக்கிறான் முண்டாசுக் கவி.
அது மட்டுமா-

‘ஒரு கிழச் சாம்பான் என்னிடம் வந்து “முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ? எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இருபிறப்பாளாவார்? என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லிப் பறையென்பது ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகை யென்றும், அதைக் கொட்டுவோன் பறையன் என்றும், பறையென்பது சக்தியின் பெயரென்றும், அவளே ஆதி என்றும், சிவனே பகவன் என்று பிராமண ரூபங்ககொண்டு அவளுடன் வாழ்ந்தானென்றும், பறையர் மேன்மைப் பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார்கள் என்றும் பலவித நீதிகளைச் சொன்னான். அதே கருத்துடையவராய் ஹிந்துக்களுடைய விடுதலையிலும், மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்துவரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதூக்கி விடுவதில் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’

“தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அக்கறையுடன் அழுதிருக்கிறான் பாரதி” என்று புல்லரிக்கும்  அறிஞர்களின் கவனத்திற்கு,

‘ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திருப்பவர் அன்றோ?”

‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற இந்த விஷம் தோய்ந்த வார்த்தை அல்லது விஷமாகவே இருக்கிற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

எம்முடன் என்பது யாருடன்?

ஆரியர்களா?

அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்களோ?

அவர்கள்தான் மற்றவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு ‘குடியுரிமைப் பட்டயம்’ அளிப்பவர்களோ?

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தாக சொல்லப்படும் இந்தக் கவி, தாழ்த்தப்பட்ட மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் நடத்தும் – இந்து மதத்தின் தலைமை கர்த்தாக்களான – பார்ப்பனர்களை அவர்களின் ‘மனுஸ்மிருதி‘ செய்கையைக் கண்டித்து,

‘ஈன்ப் பார்ப்பனர்களேனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ’

-என்று எழுதியிருந்தால்,

“தன் சொந்த ஜாதியை சேர்ந்த பார்ப்பனர்களையே வெளுத்து வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞர்கள் ‘முண்டா’ தட்டுவதில் அர்தமிருக்கும்.

dalit_women.jpg 

‘ஈனப் பறையர்’ என்கிற இந்த மோசமான விளித்தலை, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிடுகிற இந்த ஜாதியக் குறியீட்டை, சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு வீர உணர்ச்சி ஊட்டுகிற பாடலிலும் பார்க்கலாம்.

‘வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி’

‘மிலேச்சர்’ என்பது இந்தப் பாடலில் நேரடியாக அவுரங்கசீப் தலைமையிலான முகலாயர்களைக் குறிப்பதாக இருக்கிறது. இன்னும் அதை பாரதியின் காலத்தில் பொருத்தி வெள்ளையர்களைக் குறிப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மிலேச்சர்க்ள் – வேதநூலைப் பழிப்பதால் வெகுண்டெழுகிறார் பாரதி. வேதநூலைப் பழித்தால் வெகுண்டெழுவது பாரதியின் பிறப்புரிமை! சரி.

‘ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்’

இப்படி குறிவைத்து ஆலயத்தையும்-பசுக்களையும் அழித்தால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவில் இருக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் பலகோடி முதலீட்டில் தோல் பதனிடும் தொழிற்சாலை வைத்திருக்கும், அசைவ ‘ஹை-டெக்’ பார்ப்பானுக்குக் கூட கோபம் வரும். பாரதிக்கு வராதா பின்னே, வந்திருக்கிறது.
அடுத்து பாய்கிறார்,

‘வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்’

பசு மாமிசம் உண்ணும் பழக்கமுடைய முகலாயர்களை, வெள்ளையர்களை இழிந்துக் கூறவந்த பாரதி, அதே உணவு முறைப் பழக்கமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறியீடாகப் பயன்படுத்தி ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களாக அல்லாத – ஜாதி இந்துக்கள், ஜாதி கிருத்துவர்கள், முஸ்லிம்கள் இப்படி யாரயினும் தங்களுக்குள் ஒருவரை மட்டுப்படுத்தி பேசும்போது ‘பறைச்சி மாதிரி’ ‘பறையன் மாதிரி’ ‘போடா பறையா’ என்று திட்டிக் கொள்வது போல் – அதே பதத்தில், ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

‘ஈனப் பறையர்களேனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ?
என்ற வரியில் ‘எம்முடன்’ என்பது ஆரியர்கள்தான் என்று- ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

‘பேரசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்’

என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?

பின் குறிப்பு; ‘புலையன்’ தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற இன்னொரு சொல். பெரிய புராணத்தில் ‘நந்தனை’ அவருடைய ஆண்டையானபார்ப்பனர், ‘மாடும் தின்னும் புலையா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கேரளாவில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள், இந்த சொல்லால்தான் அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.

‘ஈனப் பறையர்களேனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ
?

என்ற வரியில் ‘எம்முடன்’ என்பது ஆரியர்கள்தான் என்று- ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்’
என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?

sivaji.jpg

சிவாஜி-அவுரங்கசீப் சண்டையை உதாரணம் காட்டி முகலாயர்களுக்கு எதிராக, ‘நம் கலாச்சாரத்தையும், நம் புனித மண்ணையும் பாதுகாக்க போர் புரிந்த மாபெரும் இந்து மன்னன் சிவாஜி, என்று நிறுவி, அதை கிறித்துவ வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நாம் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கடந்த காலவரலாற்றில் இருந்து மிகத் தந்திரமாக பாடம் கற்பிக்கும் பாரதி, அதே சிவாஜி மன்னாகும்போது,  ‘நீ சூத்திரன், மன்னனாகக் கூடாது’ என்று ஆகமங்களை அள்ளிப்போட்டு குறுக்கே நின்ற பார்ப்பன பட்டர்களைப் பற்றி, ஆதரித்தோ, எதிர்த்தோ ஒரு வார்த்தைக் கூட பாடவில்லை, பாட்டுக்கார பாரதி.இஸ்லாமியர்களை விரோதிகளாகச் சித்தரித்து தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களை அடியாட்களாக மாறி, மாறி பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கே குழிபறிக்கும் பார்ப்பனீய இந்து மதச் சிந்தனை இதில் இருக்கிறதா இல்லையா?

barathi001.jpg

 வேதத்தில் ஜாதிய வேறுபாடு கிடையாது,

‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’

என்றெல்லாம் ஜாதிய எதிர்ப்பாளர் மாதரி, கவிதையளக்கிற சுப்பிரமணிய பாரதி – மனுஸ்மிருதியையோ, நாலு வர்ணத்தையோ-தன் நெருப்புக் கவிதைகளால் ‘தீமூட்ட’ மறுக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் நாலு வர்ணத்துக்கு நல்வாழ்த்து ஒன்று பாடியிருக்கிறார்,

‘வேத மறிந்தவன் பார்ப்பான் – பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் – தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.

…………………………………………………………………………
…………………………………………………………………………

நாலு வகுப்பும் இங் கொன்றே – இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி’

-என்று ராஜகோபால ஆச்சாரியருக்கே குலக்கல்வி திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார், இந்த ராஜகுரு.

“அந்தப் பாடலில், பாரதி தனக்கே உரிய முறையில் – ஜாதி ஒற்றுமையை வலியுறுத்துகிறார். ஜாதியக் கல்வியை ஆதரிக்கவில்லை”
-என்று அவரின் பாடலுக்கு ஒட்டுப் போட முயற்சிப்பவர்களை, உருட்டுக் கட்டை எடுத்துக் கொண்டு ஓட, ஒட விரட்டுகிறார்-தன் கட்டுரையில்.

‘அந்நிய-வஸ்து – வர்ஜனம், ஜாதீயக் கல்வி, பஞ்சாய்த்து, சரீரப் பயிற்சி – இந்த நான்குமே சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத் தாங்குகின்ற நான்கு தூண்களாகும். இவற்றை ஆதரிப்பது நமது கடமை. இதில் சட்டத்திற்கு எவ்விதமான விரோதமும் கிடையாது. இவற்றை ஆதிக்காமலிருப்பவர்கள் தேசத் துரோகிகள் ஆவார்கள்.’

-என்று தன் நாலுவர்ண தேச பக்தியை வெளிப்படுத்துகிறார்.

bharathi4.jpg

திக்க வெறி கொண்ட முகலாயர்களும், ஏகாதிபத்திய வெறியர்களான வெள்ளையர்களும் – பல்லாயிரம் மைல் கடந்து வந்து இந்த மிதவாத, தீவிரவாத சுதந்திரப் போராட்ட கோஷ்டிகளைவிடவும் அதிகமாக ரத்தம் சிந்தி – இந்த ‘போங்கு’ மன்னர்களிடம் சண்டையிட்டுத் தியாகம் செய்து – பாடுபட்டு உருவாக்கிய இந்த நாட்டை, கவிராஜன் பாரதி கொஞ்சமும் கூசாமல்,

பாரதம் என்கிறார்

ஆரிய பூமி என்கிறார்

ஆரியர் என்கிறார்

‘இந்தியா’ என்பது கூட ‘இந்து’ என்பதின் திரிபு என்பதில் பெருமை கொள்கிறார்.
சற்றே கீழ் இறங்கி வந்து,

தமிழ் நாடு என்கிறார்,

தமிழர் என்கிறார்.

ஆனால் நிரம்ப ஞாபகத்தோடு திராவிடம் என்பதையே மறந்து போகிறார்.

ஏன்?

ஆரியம்-ஆரியர்-தமிழ் நாடு-தமிழர்-இந்தியா-இந்தியர் இப்படி- எப்படி மாற்றிச் சொன்னாலும் அதனுள் பார்ப்பனரும் அடங்குவர்.

திராவிடம் – திராவிடர் என்று சொன்னால் – அதில் பார்ப்பனர்களை எப்படிச் சேர்ப்பது?

இந்தக் கேள்வி சுப்பிரமணிய பாரதியை புரட்டி எடுத்திருக்கிறது.
அதன் பொருட்டே ‘ஆரிய நாடு – ஆரிய பூமி’ என்று அழுத்தந்திருத்தமாக சாட்சிகளோடு பொய் சொல்கிறார்.
 

***

‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்’

-என்று சூதில் மன்னனான கண்ணன், கீதையில் சொன்னதாக சொல்லப்பட்டதை, சூதாட்ட சகோதரரான அர்ஜுனன் மேற்கோளாகச் சொல்வது போல், ‘பாஞ்சாலி சபதத்தில்’ சொல்கிறார்.
அதையே நாம் பாரதியின் சிந்தனைகளுக்கும் சொல்லி வைப்போம்,

‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்’

தோழமையுடன்

வே. மதிமாறன்

ஜெயலலிதாவின் 32 சிப்பாய்களை, மேலும் கதற வைக்கும் விஜயகாந்த்!

18 06 2012

புதுக்கோட்டை இடைத் தேர்தல் முடிவு அ.தி.மு.க.-வுக்கு வெற்றியாக அமைந்தாலும், அக் கட்சிக்குள் ஆனந்தம் இல்லை. வாக்கு வித்தியாசம் போதாது என்று கட்சித் தலைவி ஜெயலலிதா அவரது 32 சிப்பாய்களையும் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறார். பாதிப்பேர், ரத்த அழுத்தம் எகிறி, ராத்திரி தூக்கத்தை தெலைத்த நிலையில் உள்ளார்கள்.

அவர்களது நிலை குறித்து ப்ளூ கிராஸ் போன்ற சேவை அமைப்புகளிடம் இதுவரை யாரும் முறையீடு செய்ததாக தெரியவில்லை.

மாறாக, தோல்வியடைந்த கட்சியான தே.மு.தி.க. ஆனந்தத்தில் மிதக்கிறது!

அக் கட்சிக்கு 30,500 வாக்குகள் கிடைத்திருப்பது தமக்கே ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியின் தலைவர் விஜயகாந்தே திகைத்துப் போய் கருத்து தெரிவித்திருக்கிறார். காரணம், தே.மு.தி.க. உருவாக்கப்பட்ட பின், அவர்கள் போட்டியிட்ட எந்தவொரு இடைத் தேர்தலிலும் டெபாசிட்டை திரும்ப வாங்கியதாக சரித்திரம் இல்லை.

ஆனால் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவின் சீண்டல், அமைச்சர்களின் கிண்டல் காரணமாக, புதுக்கோட்டை இடைத் தேர்தலில்தான் திரணியை காட்ட முயன்று, முதல் முறையாக அக்கட்சி டெபாசிட் பெற்றுள்ளது. கிண்டல் செய்த அமைச்சர்கள் கார்டனில் தண்டால் செய்து கொண்டுள்ளார்கள். அ.தி.மு.க. அமைச்சர்கள்தான் இந்திய அரசியல்வாதிகளிலேயே ‘பாடி ஃபிட்’ நிலையில் உள்ளவர்கள்.

இடிவிழுந்த நிலையில் உள்ள அமைச்சர்களின் வயிற்றெரிச்சலை மேலும் கொட்டிக் கொள்வதற்காக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நேற்று ஒரு காரியம் செய்திருக்கிறார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தே.மு.தி.க.-வுக்காக தீவிரமாக உழைத்த கட்சிக்காரர்களை சென்னைக்கு அழைத்து, தங்க மோதிரம் வழங்கி கெளரவித்திருக்கிறார். அதற்கு முன், கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் விஜயகாந்த் கலந்து கொண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தோல்வியடைந்த கட்சி ஒன்று தமது தோல்வியை கொண்டாட, வெற்றியடைந்த கட்சி வெலவெலத்துப் போய் இருப்பது சுவாரசியமான காட்சிதான்!

காசிஆனந்தன்கவிதைகள்!!!

13 06 2012

வான் முகிலே! -காசி ஆனந்தன்

இடிக்கின்றாய்…. வான்முகிலே!
ஏன் இடித்தாய்? இங்குள்ள
தமிழர் நெஞ்சில்
வெடிக்கின்ற விடுதலையின்
பேரார்வம் வெளிக்காட்ட
விரும்பினாயா?கருப்பாக வருகின்றாய்..
வான்முகிலே! ஏன் கருத்தாய்?
களத்தில் பாய
விருப்போடு நாள்பார்க்கும்
தமிழ்வீரர் வெறித் தோற்றம்
விளக்கினாயா?
சிரிக்கின்றாய்…மின்னல் வாய்
வான்முகிலே! ஏன் சிரித்தாய்?
சினந்து மண்ணை
எரிக்கின்ற தமிழ்ப்புலவன்
கவிதையினை வானேட்டில்
எழுதினாயா?ஓடிப்போ…!ஓடிப்போ…!
புதுக் கவிதை

வான்முகிலே….ஓவென்று

முழக்கமிட்டுப்

பாடிப்போ! அதிரட்டும்

மண்மேடு! காணட்டும்
பகைவர் என்போர்!

செருக்களம் வா! -காசி ஆனந்தன்

மூச்சை எடுத்தெறி தமிழா!
முழுங்கு மேகமாகிக் கிளம்புசிச்சி அடிமையாய் வாழ்ந்தோம்…..
செந்தமிழ்த்தாய் இதற்கொடா பெற்றாள்?கூனி வளையவோ மேனி?
கும்பிட்டுக் கால் பிடிக்கவோ கைகள்?

தீனி மகிழவோ வாழ்க்கை?
செந்நீர் ஆடி முழக்கடா சங்கம்!

நாங்கள் கவரிமான் சாதி
நாய்போல் எசமான் அடிகளை நக்கோம்!

தீங்கு படைப்பவன் எங்கே?
தேடி உதைப்போம்! செருக்களம் வாடா!

ஓங்கி முழுங்குக தானை!
உடைந்து நொறுங்கி விலங்கு சிதறுக!

தூங்கி வழிந்தது போதும்!
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே!

குமுறி எழடா! -காசி ஆனந்தன்

உன்னை எடுத்தெறி தமிழா!
ஒதிய மரம்போல் நின்றனை பேடி!
அன்னை துடித்திடல் அழகா?
அவள் படுந்துயர் எத்தனை கோடி
தன்னை மறந்தொரு வாழ்வா?
தமிழ்மண் அன்றோ நம்முயிர் நாடி?
முன்னைக் கதைகள் அளப்பாய்…
முண்டம்! எங்கடா மூவேந்தர் பாடி?மேடைத் தமிழ்விழா வைப்பாய்!
மேனிசிலிர்க்க வெறும்வாய் பிளப்பாய்!
ஓடைத் தவளைபோல் கத்தி
உலகில் என்னதான் பண்ணிக் கிழிப்பாய்?
பாடை உடன்கொண்டு வாடா!
பகைவன் களத்தே விழப்பாய்! அழிப்பாய்!
பீடை தொலைவதெந் நாளோ?
பிள்ளாய் விழிப்பாய்! பிள்ளாய் விழிப்பாய்!எட்டி உலகினை நீ பார்!
எங்கும் விடுதலை வாழ்வே இருக்கும்!
கட்டி உனைமட்டும் போட்டார்!
கைவிலங் கென்று நொறுங்கிப் பறக்கும்?
தட்டி எழுக உன் தோளை!
தாவுக போரில்! இத்தாய்மண் சிரிக்கும்!
கொட்டி நிறைத்திடு குருதி!
குமுறி எழடா…. விடுதலை பிறக்கும்.

பாவலரே! -காசி ஆனந்தன்

பாவலரே! போலிகளாய்
இருக்கின்றீர்கள்!
கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்
செந்நெருப்பு விழிகொண்டு
சிறியெழ மாட்டீரோ?
சிச்சி! வானில்
புண்ணிருந்தாற் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!
பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையெனும்
பூவை அந்நாள்
செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்
சங்க மணித் தமிழ்தந்தாள்….
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில்
தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்… கவிஞர்களா?
செத்துப் போங்கள்!
ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?
தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?
வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்
நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்துமின்கள்!
சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்…. மாற்றார்
பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்… ஓடி
வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்
சொல்லெடுப்பீர்… பாவலரே!
இல்லையெனில் தொழில் விடுங்கள்
அதுவும் நன்றே!

தோழரே! -காசி ஆனந்தன்

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!பட்ட நரம்பில்
பழையபடி செந்நீர்
சொட்ட உணர்ச்சி
சுரக்க விரைந்தோடி….தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

மானம் உறங்கியது!
மான மறத்தமிழர்
தானை உறங்கியது!
தாவி விரைந்தோடி…

தட்டுங்கள் தோழரே தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

மணித் தமிழின் கண்ணீர்
மறைய உலகில்
தனித் தமிழன் ஆட்சி
தழைக்க விரைந்தோடி…

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

முரசொலி-காசி ஆனந்தன்

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செந்தமிழ் நாட்டின் தீராப் பிணிகள்
போம் போம் போமென முழங்கு முரசே!
புன்மைகள் தீரப் பொங்கி முழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செவ்விழி உடையோம் செருமாண் தமிழர்
யாம் யாம் யாமென முழங்கு முரசே!
யானைகள் புலிகள் ஆனோம் முழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
சிறைமதில் சாய்ந்து சிதறிப் போமா?
ஆம் ஆம் ஆமென முழங்கு முரசே!
அரசொடு தமிழன் ஆளமுழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தீயவெம் பகைவர் ஓடமுழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தேச விடுதலை பாட முழங்கு!

தோழி -காசி ஆனந்தன்

நானோர் கனாக்கண்டேன் தோழி! – தமிழ்
நாட்டின் விடுதலை கேட்கப் பிறந்தவர்
தானை நடத்தினார் தோழி! – அங்கு
சட்டம் உடைந்தது! பகைவர் தலைகள்
வானில் பறந்தன தோழி! – இந்த
வையம் குருதியில் தோய்ந்து கிடந்தது!
மானத்தின் வேகமோ தோழி! – தமிழ்
மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்!ஈழத்தில் சிங்களம் என்றார்! – தமிழ்
இல்லத்தில் இந்திதான் என்றும் குலைத்தார்!
வேழத்தை வென்றவர் நாட்டில் – இந்த
வீணர்கள் ஏன் வந்து மோதினார் தோழி?
கூழுக்கு வழியற்றுப் போனோம் – என்றால்
குலவீரம் கூடவா இல்லாமல் போனோம்
பாழுக்கு வந்தார்கள் தோழி – வந்த
பகைவரை வணங்காத தமிழ்நாடு வாழி!வீண் சண்டை போட்டதும் இல்லை! – தமிழன்
வீணாக வந்ததை விட்டதும் இல்லை!
தூணொன்று சாய்ந்தாலும் சாயும் – தமிழர்
தோள்வீரம் இதுவரை சாய்ந்ததே இல்லை!
ஆணென்று வாழ்ந்தவரெல்லாம் – இங்கே
ஆமைபோல் அடிமைபோல் உயிர் வாழ்ந்ததில்லை!
பூணாத போர்க்கோலம் பூண்டார்! – பகைவர்
புலியோடு மோதினார் என்செய்வோம் தோழி?

காதலர் வரவில்லை தோழி! – அவர்
களத்திலே இருக்கட்டும்! இங்கென்ன வேலை?
மோதட்டும் பகைவர்கள் முன்னால் – தோழி
முத்தமும் சத்தமும் வெற்றிக்குப் பின்னால்!
மாதர்கள் வீரமே பெரிதாம்! – அவர்
மாண்டாலும் போரிலே மாளட்டும் என்பேன்!
ஆதலால் இசைபாடு தோழி – தமிழ்
அன்னையின் புகழ்பாடு! வாழட்டும் நாடு!

புகழ்பாடு-காசி ஆனந்தன்

களமெனில் முழங்கிவரும் ஏறு! – தமிழன்
கங்கு கரை பொங்கிவரும் ஆறு!
உளபகைவர் இலைஎனவே
உடல் எரிந்து நீறுபட
பளபளக்கும் வெந்தழலின் கூறு! – தமிழன்
படைவலியும் தோள்வலியும் நூறு!
மானமே தமிழனுயிர் அங்கம்! – தமிழன்
மனம் இனிய தமிழ்குலவு சங்கம்!
தேனெனும் தமிழ் அழியும்
சேதிவரும் போதினிலே
வானளவு பாயுமறச் சிங்கம்! – தமிழன்
மாசுபடாத் தூயமணித் தங்கம்
தமிழன் உடற்குருதி சூடு! – தமிழன்
தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு!
இமயம் கடாரமெனும்
இடம் பலவென்றவனலவோ
தமிழனுக்கு யாவனுளன் ஈடு? – தமிழன்
தாங்கு புகழைத் தமிழா! பாடு!

போர் முரசு!-காசி ஆனந்தன்

தவளைக் குரலில் முழுங்கினால் இங்குள்ள
தாழ்வு மறைந்திடுமோ? – நாலுகவிதை எழுதிக் கிழித்துவிட்டால் எங்கள்
கவலை குறைந்திடுமோ? – வீட்டுச்சுவருக்குள் ஆயிரம் திட்டங்கள் தீட்டிச்
சுதந்திரம் வாங்கிடவோ? – தலை

குவியக் கிடந்த செருக்களம் ஆடிக்
குதிக்கப் புறப்படடா!

உச்சியில் நின்று விழுந்துவிட்டோம் அட
உணர்ச்சி இழந்துவிட்டோம்! – உயிர்

அச்சத்தினால் இங்கு சாய்ந்துவிட்டோம்! – வீட்டில்
அடங்கி இருந்துவிட்டோம்! – தெருப்

பிச்சை எடுத்து வளர்ந்துவிட்டோம் – புகழ்
பேண மறந்துவிட்டோம்! – இந்த

எச்சில் நிலை இனி இல்லை எனக்கொடி
ஏற்றிப் புறப்படடா!

நாற்றிசை மண்ணும் கடலும் மலைகளும்
நடுங்க வலம் வருவோம்! – பெரும்

ஆற்றல் மிகுந்தவள் அன்னை அவள்மிசை
ஆணை எடுத்திடுவோம்! – இங்கு

வேற்று நிலத்தவர் ஆட்சியெனில் அந்த
விலங்கை உடைத்தெறிவோம்! – அட

சோற்றுக்கு வாழ்ந்து சுருண்டது போதும்!
சுழன்று புறப்படடா!

உலகம் அனைத்தையும் வென்ற குலத்தினை
ஊழ்வினை வெல்லுவதோ? – எங்கள்

மலைகள் எனுமிரு தோள்களையும் விதி
மங்கை மறந்தனளோ? – அவள்

கலகம் நடத்தித் தமிழர் குலத்தைக்
கவிழ்க்க முடியுமோடா? – அன்னை

முலையில் பருகிய மூச்சுடனே பறை
முழுக்கிப் புறப்படடா!

தாயே!-காசி ஆனந்தன்

அன்னையே! என்றன் தாயே!
அம்மாநீ அடுத்தாரைப் போல்தின்னவும் காலை நக்கித்
திரியவும் படைத்திடாமல்
என்னையேன் தமிழை எண்ணி
ஏங்கிடப் படைத்தாய்? இங்கே
உன்னரும் பிள்ளை நாளும்
உயிர்துடிக் கின்றேன் தாயே!
கும்பிட்டால் பல்லைக் காட்டிக்
குழைந்தால் நான் குனிந்துபோனால்
நம்பிக்கையோடு மாற்றான் கால்
நக்குவேன் என நாணாது
தம்பட்டம் அடித்தால் நாளை
தாங்கலாம் பதவி கோடி!
வெம்பிப்போய் உலர்கின்றேன் யான்….
வீரமேன் கொடுத்தாய் தேவி?
பாரம்மா…..முன்னாள் என்னைப்
படுக்கையில் அருகே வைத்துசேரனார் கதைநீ செப்பிச்
சிறியேனைக் கெடுத்ததாலே
பாரம்மா….மாற்றானுக்குப்
பணியான் உன் பிள்ளை….வீதி
ஓரமாய்க் கிடந்தும் காய்ந்தும்
உரிமைப்போர் நிகழ்த்துகின்றான்!
மானத்தின் வடிவே! என்னை
மகவாக ஈன்ற தாயே!
தேனொத்த முலைப்பா லோடும்
தீரத்தை அளித்த தேவி!
ஈனத்தை ஏற்கா நெஞ்சம்
எனக்களித்தவளே! அன்னாய்!
ஊனத்தின் உடல் வீழ்ந்தாலும்
உரிமைப்போர் நிறத்தே னம்மா!

கடலே!-காசி ஆனந்தன்

ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!
இந்நாள் இடிநிகர் அலைக்குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடிக் கரங்கள் ஒரு நாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!
அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெல்லாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!
உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!
அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!
கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கி விட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்…
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!

நறுக்குகள் – புரட்சி-காசி ஆனந்தன்

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.
குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்.

நறுக்குகள் – ஏழ்மை-காசி ஆனந்தன்

சதை பிடித்து
விடுகிறாள்
அழகு
நிலையத்தில்
எலும்புக் கைகளால்.

நறுக்குகள் – குப்பைத் தொட்டி-காசி ஆனந்தன்

அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது -குப்பைத் தொட்டி
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது -அலுவலகம்.
கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள் – 2

5 03 2012

1.மாடு

 

ஆயிரம்
ஆயிரம்
ஆண்டுகள்

வண்டி
இழுகிறது…

கொம்பை
மறந்த
மாடு.

 

2.அறுவடை

 

திரைப்படச்
சுவரொட்டியைத்

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.

 

3.புரட்சி 

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.

குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்!

 

4.விளம்பரம் 

விளம்பரம்.

குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை…

தொலைக்காட்சியில்!

 

5. மந்தை

 

மேடை

“தமிழா..!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா நீ”
என்றேன்.

கை
தட்டினான்!

 

6.கண்ணோட்டம்

 

செருப்பைப்
பார்க்கையில்

நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்
பார்க்கிறீர்கள்.

நான்
செய்தவனின்
கையைப்
பார்க்கிறேன்..!

கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள்

5 03 2012

 

1. மனிதன்

 

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

‘பசு பால் தரும்’
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்
‘காகம்
வடையைத் திருடிற்று’
என்கிறான்.

இப்படியாக
மனிதன்…

2. இலக்கியம்

 

களத்தில்
நிற்கிறேன்…

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்..!

3. மானம்

 

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு!

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே…

அம்மணமாகவே
போராடு..!

கனிமொழிக்கு பதவி தரப்போகும் கட்சி எது?

4 12 2011

kalaignar_cartoon-300x2981

கனிமொழியின் விடுதலையே தமிழ் இனத்தின் விடுதலையாக கருதி மகிழ்ந்துக் கொண்டிருக்கும் மு.கருணாநிதியை நினைத்து நினைத்து இந்த மேடையில் ஏறினேன். அதன் காரணமாக, உங்களுக்கு வணக்கம் சொல்லக் கூட வார்த்தை வரவில்லை.

கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆனதுமே, சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் குலோப் ஜாமுனும் ஜாங்கிரியும் கொடுத்து கட்சியினர் கொண்டாடுகிறார்களே. இதை யாராவது தடுத்திருக்க வேண்டாமா?

கனிமொழி தமிழ்நாட்டுக்கு எதிராக நடந்த கொடுமையை கண்டித்து சிறைக்குப் போனாரா? இல்லை மத்திய அரசின் அடக்கு முறையை எதிர்த்து சிறைக்கு போனாரா?

உலகத்தையே உலுக்கிய ஊழல் குற்றச்சாட்டில், ஏ-2 அதாவது இரண்டாவது குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது முறையா? என்பதை தி.மு.க. சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கனிமொழி இன்று சிறையிலிருந்து வெளியே வந்தாலும் கோர்ட்டு விசாரணைகளில் பங்கேற்றுவிட்டு வரும் டிசம்பர்DSC_0212a 2ம் தேதியான வெள்ளிக்கிழமை மாலை அல்லது டிச.3ம் தேதியான சனிக்கிழமை காலையில் தான் சென்னை திரும்புகிறார்.

டெல்லியிலிருந்து அவரை அழைத்து வர துரைமுருகன் தலைமையிலான குழுவை நேற்று இரவே அனுப்பி வைத்துவிட்டார் தி.மு.க. தலைவர். வெள்ளிக்கிழமை மாலை வரும் கனிமொழிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ரகசிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அவர் வந்ததும் ஓரிரு மாதங்களில் கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் அல்லது துணைப் பொதுச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதாவது ஒரு பதவியைத் தரப்போகிறார்கள். இதில் மாற்றமில்லை.

ஆனால் கலைஞர் என்ன சொல்கிறார், “ சிறையிலிருந்து வெளியே வரும் கனிமொழிக்கு பதவி கிடைக்குமா ?”என்று நிருபர்கள் கேள்வி கேட்டால், “ நான் சர்வாதிகாரி இல்லை. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே, கனிமொழிக்கு பதவி அளிப்பது தொடர்பாக கட்சியே முடிவு செய்யும்”. அந்தக் கட்சி எது என்பது தான் தி.மு.க. தொண்டர்களின் கேள்வி.அடடா… அடடா… கட்சியை கேட்டா தயாநிதி மாறனை எம்.பி.யாக்கி, மத்திய அமைச்சராக்கினீர்கள்?கட்சியை கேட்டா, கனிமொழியை எம்.பி.யாக்கினிரீகள்?

kani-888bகட்சியை கேட்டா, அழகிரியை எம்.பி. தேர்தலில் நிற்க வைத்து மத்திய அமைச்சராக்கினீர்கள்?

அட… கட்சியை கேட்டா மந்திரி சபையிலிருந்து தூக்கிய டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு மீண்டும் மந்திரி பதவி கொடுத்தீர்கள்?அட… கட்சியை கேட்டா துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித்துறையை பறித்துக் கொண்டு நீங்களே வைத்துக் கொண்டீர்கள்.அட… கட்சியை கேட்டா பா.ம.க. கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்த்தீர்கள். கல்யாண பத்திரிகை வைக்க வந்த ராமதாஸை கோழி அமுக்குவது போல அமுக்கிவிட்டு… இப்படி அரசியல் செய்வதற்கு பெயர் என்ன?“நான் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல” – இன்னும் எத்தனை காலம் தான் இந்த வார்த்தை ஜாலங்களை சொல்லி கட்சியை நடத்தப் போகிறீர்களோ தெரியவில்லை.

duraimurugan_845525eசரி.. போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

சிறையில் இருக்கும் போதே கனிமொழிக்கு என்ன பதவி கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு, கனிமொழிக்கு பதவியளிப்பது தொடர்பாக கட்சியே முடிவு செய்யும் என்று கருணாநிதி கதைக்கிறார் என்றால் யாராவது நம்புகிறீர்களா?

கனிமொழிக்கு பதவி தரப்போகும் கட்சி எது தெரியுமா? அதில் உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா?

கட்சியின் பெயர்: க.க.ரா.மு.க.

கனிமொழிக்கு பதவி தரும் கட்சியில் மூன்றே மூன்று உறுப்பினர்கள் தான். ஒருவர் கருணாநிதி இரண்டாவது ராசாத்தி, மூன்றாவது கனிமொழி.

என்னது கட்சியின் பெயர் புரியவில்லையா?

கருணாநிதி கனிமொழி ராசா(த்தி) முன்னேற்றக் கழகம்.

இப்படியே இருங்க. கட்சி கட்சி சூப்பராக இருக்கும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் இந்த கொடுமை என்றால், டெல்லியில் இன்னும் கொடுமையான காட்சிகளை காணலாம்.

டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் இரண்டு நாள் கூட்டம். இதில், சிதம்பரம் “வயதானவர்கள் கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டு இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்” அதே கூட்டத்தில் ராகுல் பேசும்போது அரசியலில் தான் மிகப்பெரிய ஊழல் நிலவுகிறது. ஏராளமான இளைஞர்கள் அரசியலுக்கு ஈடுபடுவது மூலம் ஊழலை ஒழிக்க முடியும்” என்கிறார்.

இதையெல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசா, கனிமொழி, ஷரத் குமார், கரீம் மொரானி, ஆஸிஃப் பல்வா,ramadoss_and_karuna சாஹித் பல்வா ஆகியோர்களை பார்த்த பிறகு கூட ராகுல் இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஊழல் இருக்காது என்று நம்புகிறாரா?

இன்று மாலை முதலமைச்சர் ஜெயலலிதா கவர்னரை சந்திக்கிறார். உடனே அமைச்சரவை மாற்றம் என்று யாரும் கருதிவிட வேண்டாம். மூன்று மாத காலம் ஊட்டியில் தங்கியிருப்பது குறித்து தகவல் கொடுக்கவே கவர்னர் ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா பார்க்கிறார்.

நன்றி! வணக்கம்!