41. ஈழ மக்கள் நிலை பற்றி :- ஜோன் ஹோம்ஸ்

0116வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா அகதி முகாம் களில் சுதந்திரமின்றி அடைத்து வைக் கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை மேற்படி மக்களை சந்திக்கச் சென்றபோது அங்குள்ள மக்களு டன் சுதந்திரமாக உரையாட முடிய வில்லை. அதற்கான சூழ்நிலையும் அங்கு இல்லை’ என்று ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலர் ஜோன்ஹோம்ஸ் நேற்று தக வல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரி வித்தார்.
அத்துடன் அகதிகளை சந்திக்கச் சென்றபொழுது அமைச்சர்களும் அரச அதிகாரிகளும் படைத்தரப் பினரும் குழுமியிருந்தமையால் மக் களுடன் சுதந்திரமாகக் கலந்துரை யாட முடியவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த ஹோம்ஸ் நேற்று முன்தினம் வவுனியாவிற்குச் சென்று அங்கு இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களை பார்வையிட்ட பின்னர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற

தகவல் தொழில் நுட்ப நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா விஜயம் தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கைக்கான எனது இரண்டாவது விஜயம் இதுவாகும். முதலாவது தடவை நான் வந்த போது இருந்த நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய மாற்றங்கள் காண முடிகின்றன. வடக்கில் போர் இடம்பெறும் இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் சிறை வைக்கப்பட்டவர்கள் போலவே முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களது இயல்பான வாழ்க்கையை காண முடியவில்லை. அம்மக்கள் தொடர்பாக நான் அரசாங்க அதிபர், ஐக்கிய நாடுகள் பணியாளர்கள், அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் என பல தரப்பட்டவர்களுடன் பேசினேன். இதுதவிர இன்று காலை (நேற்று) ஜனாதிபதியுடனும் பேசினேன்.

யுத்தம் நடைபெற்றுவரும் பகுதிகளை அண்டிய பகுதிகளில் ஷெல் விழுவதால் தினம் மக்கள் உயிரிழக்கின்றனர். எனவே மக்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதனை வலியுறுத்தியுள்ளேன். வவுனியா முகாமிற்கு யுத்தம் இடம்பெறும் பகுதியில் இருந்து தினமும் மக்கள் வந்து கொண்டிருப்பதால் அவர்கள் தொடர்பான சரியான எண்ணங்களை கூற முடியாதுள்ளது. வவுனியாவில் இடம்பெயர்ந்து நெருக்கடியில் வாழும் மக்களின் நிவாரணப்பணிக்காக இலங்கை அரசாங்கத்திற்கு பத்து மில்லியன் யூ.எஸ். டொலர் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கருத்து தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளது. ஐ.நா. வின் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

வவுனியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட இவர் அகதி முகாமிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதற்கும், அவர்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். வவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் தங்கி இருப்போருக்கு விசேட அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தõர். அடையாள அட்டை வழங்கும் பொழுது பொதுமக்களிடையே பயங்கரவாதிகளை எப்படி இனங் காண்பீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர் இனங்காண்பது தொடர்பான நடவடிக்கைகளை படைத் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். எனவே தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்.

உதய நாணயக்கார இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் இராணுவ ஊடக பேச்சாளர் உதய நாணயக்கார கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பில் நேற்று முன்தினம் இரவு புலிகள் விமானம் மூலம் மேற்கொண்ட தாக்குதல் தற்கொலை தாக்குதலே. கொழும்பில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 8 ஆவது தாக்குதல் இது. புலிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தையும், இறைவரி திணைக்களத்தையுமே இலக்கு வைத்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

புலிகள் தாக்குதலை மேற்கொள்ள இரவு 2.15 மணிக்கு வந்த வேளையில் எமது பாதுகாப்பு தரப்பினர் கண்காணிப்பில் இருந்ததனால் அவர்களது விமானங்கள் இரண்டும் சுட்டு வீழ்த்தப்பட்டன. படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் 250 கிலோ வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது. புலிகள் தாக்குதல் நடத்துவதற்காக செலுத்தி வந்த 2 விமானங்களில் ஒன்று கட்டுநாயக்க பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் மற்றொன்று இறைவரி திணைக்களத்தின் பின் பகுதியில் வீழ்ந்து சிதைந்துள்ளது. இறைவரி திணைக்களத்தை தாக்குதல் நடத்த வந்த விமானம் லொறி ஒன்றினை இயக்கும் இயந்திரத்தின் அளவிலேயே இருந்தது.இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விளக்கங்களை அறிய ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது மேலுமொரு ஊடகவியலாளர் சந்திப்பில் இது பற்றி கூறுகிறேன் என நிறுத்திக் கொண்டார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: