07 இந்திய குழந்தைகளின் தலைவிதி

இந்திய அரசாங்க பொதுத்துறை தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை

பாதுகாக்க வேண்டுகோள்

 இந்திய தடுப்பூசி முகாமும் தடுப்பூசி தேவையும் பற்றி

 

ஆண்டு ஒன்றுக்கு 26 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் பிறக்கின்றhர்கள்.  இக்குழந்தைகளுக்கு அவர்கள் ஒன்பது மாத வயது அடைவதற்குள் தடுப்பூசிகள் போடவேண்டும்.  இவைகளை மத்திய அரசாங்கம் இந்திய தடுப்பூசி திட்டங்கள் மூலம் நாடு தழுவிய முறையில் கீழ்க்கண்;ட நோய்களுக்கு வருடாந்திர தடுப்பூசி தேவைகளை உற்பத்தி செய்து நல்ல தரமான மருந்துகள் அளித்து வருகின்றன.

 

நமது தேசிய மருந்து தேவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன

 

240 லட்சம் டோஸா; அளவிற்கு Bஊழு மருந்து (காசநோய் வராமல் தடுப்பதற்கு)

1500 லட்சம் டோஸா; அளவிற்கு னுPகூ ஊசிமருந்து (கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான் மற்றும்  ரண ஜன்னி வராமல் தடுப்பதற்கு)

 

20 லட்சம் டோஸா; அளவிற்கு னுகூ ஊசி மருந்து (கக்குவான் இருமல் மற்றும் ரணஜன்னி வராமல் தடுப்பதற்கு)

1000 லட்சம் டோஸா; அளவிற்கு கூகூ மருந்து (கருவுற்ற தாய்மார்களுக்கு ரணஜன்னி வராமல் தடுப்பதற்கு)

 

75 லட்சம் அளவிற்கு Aசுஏ வெறிநாய்க்கடி (ரேபீஸ்) ஊசி மருந்து (வெறிநாய்க்கடி மூலம் வரும் ரேபீஸ் என்ற நோய் வராமல் தடுப்பதற்கு)

 

மேலே கூறியுள்ள தடுப்பூசிகள் மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களாகிய மத்திய ஆராய்ச்சி நிறுவனம் (ஊநவேசயட சுநளநயசஉh ஐளேவவைரவந) கசோலி, இமாச்சல பிரதேசம், பி.சி.ஜp. (Bஊழு ஏயஉஉiநே டுயb) ஆய்வகம், கிண்டி, சென்னை மற்றும் பாஸ்டியர் நிறுவனம் (Pயளவநரச ஐளேவவைரவந டிக ஐனேயைஇ ஊடிடிnடிடிச) குன்னு}ர், நீலகிhp மாவட்டம், தமிழ்நாடு ஆகிய இம்மூன்று அரசுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசிகள் உற்பத்தி செய்து இந்திய தடுப்பூசி திட்டங்கள் மூலம் மத்திய அரசால் நமது நாட்டு குழந்தைகளுக்கு இலவசமாக அளித்து வருகிறேhம்.

 

மேற்கூறிய பொதுத்துறை நிறுவனங்கள் நல்ல உற்பத்தியுடன் ஆய்வு மையத்தையும் எடுத்து நடத்த தயாராக உள்ளன.  மேலும் ழுஆP என்னும் தர நிர்ணயத்தை சீரிய முறையில் தரம் உயர்த்தவும் தயாராக உள்ள நிலையில், உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய அவசியத்தை அறிய முடியவில்லை.

 

அரசின் தவறhன கொள்கையால் அரசுத்துறை நிறுவனங்களை மூடும் நடவடிக்கை

 

            இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாடு நிறுவனம் (NசுA) தற்சமயம் மருந்துகள் தயாhpக்கும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து வெகுவிரைவில் உலக சுகாதார மையத்தின் சிபாhpசின் படி உலக சுகாதாரமைய தரத்திற்கு இணையான உற்பத்தி முறைகளுக்கு தேவையானவற்றை நிர்மாணித்து அல்லது மாற்றி அமைத்து அனைத்து குறைகளையும் சாp செய்து மீண்டும் அவர்களிடம் அனுமதி கேட்டு தொடங்கலாம் என்ற அறிவுறுத்தி உள்ளது.

 

 

இதில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் பங்கு

 

            மத்திய சுகாதார அமைச்சகம் தற்சமயம் இந்நிறுவனங்களின் முக்கியத்துவம் மற்றும் நமது நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு அளித்து வரும் சுகாதார சேவையின் முக்கியத்துவம் கருதி இந்நிறுவனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து இவைகளை மேம்படுத்துவதற்கு பதிலாக மருந்து உற்பத்தியை முடக்கும் நோக்கிலும் தனியார் நிறுவனத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்நிறுவனங்களின் மருந்துகளை பாpசோதனை செய்யும் கூடமாக மாற்றி அமைக்க துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறhர்.

 

            உலக சுகாதார மையத்தில் கூறப்பட்டுள்ள மருந்து உற்பத்தி செய்யும் விதிமுறைகள் மற்றும் வசதிகள் உற்பத்தி செய்த மருந்துகளை வெளிநாடுகளுக்கு உலக சுகாதார அமைப்புகள் மூலம் வாங்கி ஏற்றுமதி செய்வதற்கு தான் தேவைப்படுகிறது மாறhக நமது நாட்டில் உற்பத்தி செய்த மருந்துகளை நமது நாட்டு தரக் கட்டுப்பாடு கொள்கைகள் மற்றும் பாpந்துரைகள் மூலம் நமக்கு நாமே உபயோகப்படுத்திக் கொள்ள தடை ஏதும் இல்லை.  அண்டை நாடான சீனாவில் அவர்கள் உற்பத்தி செய்த மருந்துகள் அவர்களின் தரக்கட்டுப்பாடு வாhpயம் மூலம் சாpபார்க்கப் பட்டு உபயோகத்தில் உள்ளது.  அதேபோல், நாமும் நமது தடுப்பூசி உபயோகத்திற்கு அரசாங்க நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மருந்துகளை வாங்கி உபயோகிக்க நமது தரக்கட்டுப்பாடு நிறுவனம் ஏற்பாடு செய்;ய வேண்டும்.  மேலும் இந்நிறுவனங்கள் மூலம் இதுநாள் வரை விநியோகித்து வந்த தடுப்பூசிகள் தரம் என்றுமே குறைந்தது இல்லை மாறhக வெளிநாட்டு மருந்துகளுக்கு இணையாக இருந்து வந்துள்ளது.

 

            மேலும் மத்திய அமைச்சகம் உள்நோக்கத்துடன் இந்நிறுவனங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடாமல் புதிதாக செங்கல்பட்டில் சுமார் 150 கோடி ஆரம்ப கட்ட மூதலீடு செய்து புதிதாக மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் நிறுவப் படவேண்டும் என்று கூறுகிறhர்.  தற்போது செயல்படும் மூன்று நிறுவனங்களுக்கு மேம்படுத்தும் செலவு சுமார் 50 கோடி மட்டும் தான் தேவைப்படுகின்றது.  நமது நாட்டின் தடுப்பூசி தேவையை சுமார் 60 விழுக்காடு இம்மூன்று நிறுவனங்கள் மூலம் தேசிய தடுப்பூசி முகாம்களுக்கு இவ்வளவு வருடங்களாக வழங்கி வந்துள்ளது.  இவைகளை மூடுவதன் மூலம் தேவைகளுக்கான தடுப்பூசிகள் விநியோகம் மத்திய அரசு தனியார் மற்றும் பன்னாட்டு மருந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கிறது.

 

 

 

 திட்டமிடப்பட்டுள்ள தடுப்பூசிப்பூங்கா (ஏயஉஉiநே Pயசம)

 

            இந்துஸ்தான் லேடக்ஸ் லிமிடெட் (ழiனேரளவயn டுயவநஒ டுiஅவைநனஇ கூசiஎயயேவோயிரசயஅ) என்கின்ற பொதுத்துறை நிறுவனத்திற்கு செங்கல்பட்டில் தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நிலம் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.  இவர்கள் தேசிய தடுப்பூசி முகாம்கள் மூலம் உபயோகிக்கும் மருந்துகளும் மற்ற தடுப்பூசி மருந்துகளும் உற்பத்தி செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  இவர்கள் தடுப்பூசி மருந்து தயாhpப்பில் முதல்முறையாக ஈடுபடுகிறhர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும்  ஆரம்பித்தவுடன் நான்கு ஐந்து தடுப்பூசிகள் ஒன்றhக தயாhpத்து நான்கு அல்லது ஐந்து நோய்களை ஒருங்கிணைத்து தடுக்கும் தடுப்பூசிகள் வெளிநாட்டு நிறுவனங்களான மூலம் ழுAஏஐஇ ஐஏஐஇ ஐAஏஐ  மூலம் நாம் வாங்கி உபயோகிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இம்மூன்று நிறுவனங்களிலும் அனுபவம் மிக்க விஞ்ஞானிகள்; மற்றும் அனுபவம் மிக்க அலுவலர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று அரசுத்துறை நிறுவனங்கள் 100 வருடங்களாக இத்துறையில் ஈடுபட்டு இந்த ஆண்டு வரை தொய்வில்லாமல் மருந்துகள் உற்பத்தி செய்து செவ்வனே இயங்கி வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வெளிநாட்டு தடுப்பூசி விநியோக நிறுவனங்களின் பங்கு

           

2000ல் ஆரம்பிக்கப்பட்ட உலக அமைப்பான ழுAஏஐ (ழுடடியெட Aடடயைnஉந கடிச ஏயஉஉiநேள யனே ஐஅஅரnளையவiடிn)இ இந்திய அரசிடம் சுமார் 350 மில்லியன் டாலர் மதிப்பிற்கான புதிய தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.  இது போன்ற பன்னாட்டு அமைப்புகள் மேலும் சில மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் முக்கிய தேவையான தடுப்பூசி திட்டத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறhர்கள்.  இதற்கு உலக சுகாதார நிறுவனமும் விதி விலக்கல்ல.  உலக சுகாதார நிறுவனமும் ஒருங்கிணைந்த ழib மருந்தினை அனைத்து தடுப்பூசி திட்டத்திலும் அந்தந்த நாட்டிற்கு தேவையா என்பதை அறியாமல் எல்லோரும் பயன்படுத்தும்படி சொல்கிறது.  இச்செயலானது சுதந்திர நாடுகள் தங்களது குறைந்த பட்ச வளங்களை (மருந்துகளை) பயன்படுத்தும் உhpமையை பறிக்கின்றபடி உள்ளது.  ஊடிஅbடி ஏயஉஉiநே அறிமுக திட்டமானது முத்தடுப்பு மருந்தின் விலையை 17 மடங்கு உயர்த்திய படி உள்ளது.  இத்தகைய உலக அமைப்புகள் ஆரம்பத்தில் திட்டச் செலவுகள் செய்து பின்பு அந்தந்த நாடுகளின் பொறுப்பில் இத்திட்டச் செலவை விட்டு விடும்.  Pரடளந Pடிடiடி Pசடிபசயஅஅந-ல் இந்தியர்கள் இதை அனுபவித்திருக்கிறhர்கள்.

 

இந்திய குழந்தைகளின்; தலைவிதி

 

            மேலே கூறியபடி அரசு முடிவுகள் எடுத்தால் இந்திய ஏழை எளிய குழந்தைகள் தற்சமயம் இலவசமாக பெற்று வரும் தடுப்பூசிகள் பிறந்ததில் இருந்து 9 மாதத்திற்குள் பெறும் மருந்துகள் இனி கேள்விக்குறி ஆகிவிடும்.  குழந்தைகள் ஆரோக்கியமுடன் வாழ்வதற்கு உhpய உhpமையும் இனி சந்தேகம் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது.

 

ஒரு வேண்டுகோள்

 

            பொதுமக்களுக்கு தேசிய நலன் கருதி மருத்துவர்கள் சங்கங்கள் வைக்கும் வேண்டுகோள் யாதெனில் பொதுமக்களும் எங்களுடன் சேர்ந்து இவ்வாறு மத்திய அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைகளை இந்த மூன்று அரசின் நிறுவனங்களை மூடும் நடவடிக்கைகளை தடுத்து நமது நாட்டு குழந்தைகளுக்கு தரமாக வீhpயமிக்க தடுப்பூசிகள் எளிதில் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கிடைக்கப் பெற்று எதிர்கால இந்தியர்களாகிய நமது குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க நமது மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் பிரதம மந்திhp ஆகியோருக்கு தங்கள் மேலான கருத்தினை தொpவிதது மேற்கூறிய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளின் முடக்கும் நடவடிக்கையை தகர்த்தெறிய வேண்டுகிறேhம்.

 

இவண்

பாஸ்டியர் ஆய்வக பாதுகாப்பு இயக்கம் க்ஷ

மக்களுக்காக தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம்.

 

நன்றி

சுப்ரமணியன் குவைதில் இருந்து

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: