செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா? இதுதாண்டா ஜாதி

16 01 2013

படம்

ன் ஜாதி பெண்களை தலித் இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்வது, பணத்திற்காகவும், சொத்துக்களை எழுதி வாங்குவதற்காகவும்தான், என்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.

அப்படியானால்,

பெண்களிடம் வரதட்சிணை வாங்கி அவர்களை சுரண்டித் தின்கிற ஜாதிக்கரான், தன் ஜாதிக்காரனா? தலித்தா?

பார்ப்பானிலிருந்து எல்லா ஜாதிக்காரனும் தன் ஜாதி பெண்களை வரதட்சிணை என்கிற பெயரில் சூறையாடுகிறான்.

இவ்வளவு பணம், இவ்வளவு நகை தந்தால்தான்… என்று பேரம் பேசி, நடக்கிற இந்த மானங்கெட்டத் தனத்திற்கு பெயர்தான் திருமணமா?

இதில் கொஞ்சம் குறைந்தாலோ, பிறகு பண்டிகை, குழந்தை பிறப்பு போன்ற நாட்களில் சீர் செய்ய முடியாமல் போனாலோ அடி, உதை, குத்து என்று தன் ஜாதி பெண்களிடம் செயல்பட்டு தாங்கள் வீரபரம்பரை என்பதை நிரூபிக்கிறார்கள் எல்லா ஜாதிக்காரனும்.

செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா? தன் ஜாதி பெண்களை சுரண்டித் தின்னுப்புட்டு… அப்புறம் என்ன ஜாதி பெருமை வெங்காயம் வேண்டிக்கிடக்கு?

பெண்களுக்கு எதிரான இந்த முறை திருணமங்களில் முஸ்லிம், கிறித்துவர்கள் யாரும் தப்புறத இல்ல..

நீங்க பெரிய முற்போக்கா இருக்கனும்னு சொல்லல.. நீங்க பேசுற வியசத்திற்காவது உண்மையாக இருங்க.

உங்களுக்கு தில் இருந்தா, ‘இனி எவனாவது நம்ம ஜாதி, மத பெண்கிட்ட வரதட்சிணை வாங்குன அவனை சும்மா விட மாட்டோம். இதுக்கு முன்னால வாங்கிய வரதட்சிணையையும் திருப்பிக் கொடு’ என்று சொல்லுங்க.

முடியுமா? முதலில் உங்களாலே வாங்கமா இருக்க முடியுமா? டாக்டருக்கும், இன்ஜினியருக்கும் எவ்வளவு கொட்டி அழுதிருப்பாங்க..

உண்மையில் ஒவ்வொரு ஜாதி இந்து பெண்களும் தன் ஜாதியை சேர்ந்த ஆணாதிக்க வெறியர்களான தன் கணவர்களிடமிருந்து சட்ட ரீதியான பாதுகாப்பை பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்ட மசோதாதான் காரணம்.

அவர் இல்லை என்றால், அந்தக் காலம் மாதிரி, ஒவ்வொரு ஜாதி இந்துவும், ஆளுக்கு நாலு பொண்டாட்டி கட்டிக்கிட்டு நாலு பெண்களின் வாழ்க்கையையும் நாசம் செஞ்சிருப்பானுங்க…

பார்ப்பனப் பெண்களிலிருந்து வன்னியர் பெண்கள் வரை தன் ஜாதி ஆண்களின் கொடுமைகளிலிருந்து ஓரளவுக்கு பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் வாழ்கிறார்கள் என்றால் அது அண்ணல் அம்பேத்கரால்தான்.

அது சரி.

‘சொத்துக்கு ஆசைப்பட்டு, நம்ம வீட்டு பெண்களை காதல் கல்யாணம் செய்கிறார்கள்’, என்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.

பெண்களுக்கு எந்த ஜாதி இந்து சரிபாதியா சொத்துக் கொடுக்குறான்? எல்லா சொத்தையும் மகன்களுக்குத்தானே எழுதி கொடுக்குறான்.

தன் பெண்களுக்கு செலவு செய்து திருமணம் செய்கிறான். சீர் செய்கிறான் அவ்வளவுதான். சொத்துல பங்கு கேட்டால் கூட கொடுப்பதில்லை.

இன்னும் சரியாக சொன்னால், ஆணாதிக்க சமூக அமைப்பில், காதல் திருமணத்தில் ஈடுபடுகிற ஆணுக்கு பொருளாதார நஷ்டமும். பெண்ணுக்கு லாபமும்தான்.

பெண்ணை பெற்றவர்களுக்கு காதல் திருமணம் ஒரு வரப்பிரசாதம்.

வறுமையில் இருக்கிற ஒரு ஜாதி இந்து, தன் ஜாதிக்குள்ளேயே தன் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், மிகக் குறைந்தது 3 லட்சமாவது உடனடியாக தேவை.

மாறாக, அந்தப் பெண் தலித் இளைஞரையோ, வேறு ஜாதிக்காரரையோ காதல் திருமணம் செய்து கொண்டால், அந்த செலவு மிச்சம்.

ஆனால், மாப்பிள்ளை தலித்தாக இருந்தால், தன் பொருளாதார லாபத்தை விடவும், இந்தத் திருமணம் தனக்கு மிகப் பெரிய அவமானமாக கருதுவதான் ஜாதி இயங்கும் தன்மை.

அப்படித்தான் இப்போதும் இயங்குகிறார்கள், தலித் விரோதிகள்.

நன்றி : – அண்ணன் மதிமாறன் 

Advertisements

செயற்பாடுகள்

தகவல்

One response

16 01 2013
Arul D

saattai adi… nalla soneenga…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: