08 ஈழத் தமிழர்களுக்காக உயிர் கொடுத்த தமிழ்ப் பத்திரிகை ஊழியர்!

ஈழத் தமிழர்களுக்காக உயிர் கொடுத்த தமிழ்ப் பத்திரிகை ஊழியர்!

சென்னை: சிங்கள இன வெறியர்களால் அன்றாடம் ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவிக்கப்படும் அப்பாவி ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முன்வராத மத்திய அரசையும், வாய் மூடி மௌனியாக நிற்கும் ஐநா சபை உள்ளிட்ட உலக நாடுகளையும் கண்டித்து தூத்துக்குடியைச் சேர்ந்த உண்மைத் தமிழ் இளைஞர் முத்துக்குமார் இன்று சென்னை ராஜாஜி பவன் எதிரே தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.

இந்தச் சம்பவம் உலகையே குலுக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புளிய நல்லூர் கிராமத்தில் வசித்து வரும் குமரேசன் என்பவரின் மகன் இந்த முத்துக்குமார்.  வயது 30. கொளத்தூர் மக்கான் தோட்டம், திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்தார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு மகள் நடத்தும் ‘பெண்ணே நீ’ மாத இதழில் டிடிபி ஆபரேட்டராகப் பணி புரிந்து வந்தார்.

இன்று மத்திய அரசு அலுவலகம் அமைந்துள்ள சாஸ்திரி பவன் எதிரில் நின்று மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். ஈழத்தில் துன்பப்பட்டு சாகும் எங்கள் சகோதரர்களைக் காப்பாற்ற மாட்டீர்களா… அவர்களது உரிமைகளைப் பெற்றுத் தரமாட்டீர்களா… என்று கண்ணீருடன் கதறி முத்துக்குமார், பின்னர் தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணையைத் தனது உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் சுற்றி நின்றிருந்தவர்கள் நீண்ட நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, கடைசியாகவே அந்த இளைஞனிடம் வந்துள்ளனர். அதன்பிறகே போலீசார் வந்து அந்த இளைஞனை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் அந்த சகோதரன் தன் இன்னுயிரைப் பறிகொடுத்துவிட்டான்.

சிங்களர்களின் இன வெறியால் அன்றாடம் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் நமது தமிழ் சகோதரர்களுக்கு நம்மால் எதுவும் செய்ய முடிய வில்லையே என்ற கையறு நிலையில் தவித்து வரும் சமூகத்தின் குரலாகவே இந்த கொடூர சம்பவத்தைப் பார்க்கின்றனர்.

ஈழத் தமிழர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள்… அவர்களுக்கு நேரும் இன்னல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்ற பெரும்பான்மைத் தமிழர்களின் உள்ளக் குமுறலை இப்படி நெஞ்சை உலுக்கும் விதத்தில் வெளிக்காட்டிவிட்டார் அந்த தூய தமிழ்ச் சகோதரர். இந்த மரணம் நியாயப்படுத்த முடியாதது… ஈடுசெய்ய முடியாத இழப்பு.

செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம், இப்போது சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரதம், சென்னை அனைத்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம், மதுரையில் பேரெழுச்சியுடன் உணர்வைக் காட்டும் நம் மாணவச் சொந்தங்கள், மத்திய தமிழகமெங்கும் சிலிர்த்துக் கிளம்பியுள்ள மாணவ சகோதரிகள்…

இவையெல்லாம் இந்த உணர்வின் வெளிப்பாடுகள்!

இந்தச் சகோதரர்களும் செத்து மடியட்டும் என வேடிக்கைப் பார்க்கப் போகிறதா, புலிகளைப் பழிவாங்கும் வெறியில் சிங்களனுக்கு ஆயுதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கும் சோனியாவின் அரசாங்கம்…?

தலைவர்களே… உங்களால் முடியாததை எமது சொந்தங்கள் செய்து காட்டிவருகிறார்கள். இப்போதாவது, பொங்கி எழுந்துள்ள இந்தத் தமிழ் உணர்வு வீணாகிப் போய்விடாமல் இந்த உணர்ச்சிகளை ஒன்று சேர்த்துப் பெரும் போராட்டங்களை நடத்தித் தமிழர்களைக் காக்க முன்வாருங்கள்!

‘வேண்டாம் இந்த விபரீதம்’ – ராமதாஸ் வேண்டுகோள்!

முத்துக்குமார் தீக்குளிப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இலங்கைத் தமிழர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல தமிழகத்தில் உள்ள தமிழர்களின் உயிரும் முக்கியம். எனவே யாரும் உயிரை மாய்க்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் தமிழினப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகம் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள எவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்க வேண்டாம். அத்தகைய முயற்சியில் இறங்குவதை யாரும் ஆதரிக்கவும் முடியாது.

சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்த துயரச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரத்தில் இந்த நிகழ்வை பின்பற்றி தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் எவரும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இலங்கை தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது இங்குள்ள தமிழர்களின் உயிர்.

எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் எத்தகைய முயற்சியிலும் எவரும் ஈடுபடக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதனை இலங்கைத் தமிழர்களே விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: