015 பிரபாகரனை பிடிக்க முடியுமா ? – ஆய்வு

053

நேற்றுக் காலையில் என்னோடு கதைத்த கவிஞர் ஒருவர் “பிரபாகரனைப் பிடித்துவிடப் போவதாகச் செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள��
�…. வேதனையாக இருக்கிறது”என்று சொன்னார். எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது… தலைவர் பிரபாகரனைப் பிடித்துவிடுவார்கள் என்பதனால் அல்ல; ‘பிடித்துவிடுவோம் விடுவோம்’ என்று முழக்கமிடும் பேரினவாதிகளையும், அவர்கள் வாய்மொழியும் செய்திகளின் உண்மையைச் சற்றும் உய்த்தறியாமல் பரப்பும் ஊடகவியலாளர்களையும் பார்த்துத்தான் வேதனையாக இருக்கிறது. அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்பதா அல்லது இலங்கையே வைத்துக்கொள்வதா என்பதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. குரங்கு அப்பம் பிரிக்கிற கதை காரணமில்லாமலே ஞாபகத்திற்கு வருகிறது. சடுதியான மறதியில் வீழ்ந்து மக்கள்தான் வாக்களித்துத் தொலைக்கிறார்கள் என்றால், அரசியல்வா ிகள் அவர்களுக்குமேல் வரலாற்று மறதி நோயால் பீடிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ‘பிரபாகரனைப் பிடிப்பது’என்ற விடயத்தை ஏதோ பட்டாம்பூச்சியைப் பிடிப்பதுபோல மெத்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அமைதிப் படையாக இலங்கையில் காலடி வைத்த இந்திய இராணுவம் அழிவுப்படையாக மாறி பேரனர்த்தங்களை விளைவித்தபோது, பிரபாகரன் அவர்களும் ஏனைய போராளிகளும் காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது நாமெல்லோரும் அறிந்ததே. போராளிகளை மரணம் நிழலெனத் தொடர்ந்த காலமது. அந்நாட்களில் பிரபாகரன் அவர்களது மெய்க்காவலர்களில் இருவர் கைகளில்’பெற்றோல்’குடுவைகளுடன் எப்போதும் தயார்நிலையில் இருந்தார்கள். காரணம், “நான் குண்டடிபட்டோ வேறெவ்வகையிலோ இறந்துபோக நேர்ந்தால் எனது உடல்கூட அவர்களது கைகளில் சிக்கக்கூடாது. நீங்கள் தற்கொலை செய்துகொள்வதாயின் எனது உடலைக் கொழுத்திய பின்னரே செய்துகொள்ளவேண்டும்”என்று அந்த இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுக்கும் அவர் பணித்திருந்தார். உயிரற்ற தனது உடல்கூட கைப்பற்றப்படக்கூடாதென்பதில��
� மிகக்கவனமாக இருந்தவரா உயிரோடு பிடிபடுவார்? ஈழத்தமிழர்களின ் வாழ்வுரிமைப் போராட்டத்தினை நசுக்குவதில் காட்டும் மும்முரத்தை ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்றை நினைவுகொள்வதிலும் காட்டினால் நன்று.

“எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சமரசத்திற்குட்படாத, விலைபோகாத ஒருவரின் வழிநடத்தலில் இயங்கி, உலகத்திலுள்ள போராளி அமைப்புகளில் போர்த் தந்திரோபாயத்திலும் அர்ப்பணிப்பிலும் சுயகட்டுப்பாட்டிலும் தீரத்திலும் முதன்மையானது என்று எதிரிகளையே வியப்படைய வைத்தவர்களுமான விடுதலைப் புலிகள் தமிழர் தாயகப் பிரதேசங்களை ஒவ்வொன்றாக எதிரிகளின் கைகளுக்கு விட்டுக்கொடுத்துப் பின்னகர்ந்து செல்வது எதனால்?”என்பதுதான் இன்றைய மில்லியன் டொலர் கேள்வியாகும்.

உலகின் நான்காவது பலமான இராணுவம் என்று அறியப்பட்ட இந்திய இராணுவம் ‘இனி முடியாது’ என்று திரும்பிச் சென்றதை நாமறிவோம். 1,80,000 வரையிலான எண்ணிக்கையுடைய இராணுவ பலத்தை (இந்தியா போன்றவர்களின் படையுதவிகள் தவிர்த்து) தன்னகத்தே கொண்டதும், பாதுகாப்புச் செலவினமாக ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடி ரூபாவை வாரியிறைத்து வருவதுமான இலங்கை அரசுக்கு இருபத்தைந்தாண்டு காலமாக கண்மூடினால் புலிச்சொப்பனமாக (இது சிம்மசொப்பனமல்ல) விடுதலைப் புலிகள் இருந்துவருவதை நாமறிவோம். 1995ஆம் ஆண்டு ரிவிரச எனப் பெயர் சூட்டப்பட்ட பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையின் விளைவாக இலட்சக் கணக்கான தமிழர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இரவோடிரவாக பெயர்ந்து வன்னி நோக்கி நகர்ந்துபோன பேரவலம் நிகழ்ந்தது. அப்போது முல்லைத்தீவில், பூநகரியில், ஆனையிறவில் பலம்வாய்ந்த இராணுவ முகாம்கள் இருந்தன. ‘அசைக்க முடியாது ‘ (டி.சிவராம் அவர்களின் வார்த்தைகளில்)என்று அமெரிக்காக்காரனே வந்து பார்த்து தரச்சான்றிதழ் வழங்கிவிட்டுப் போன ஆனையிறவையே புலிகளால் அசைக்க முடிந்தது. முல்லைத்தீவு, பூநகரி இராணுவ முகாம்களும் புலிகளிடம் வீழ்ந்தன. இவ்வாறாக வெல்லுதற்கரியவர்கள் என்று பெயர்பெற்ற விடுதலைப் புலிகள் மாங்குளம், மல்லாவி, கிளிநொச்சி, முகமாலை என்று தொடர்ச்சியாக விட்டுக்கொடுத்தபடி பின்னகர்ந்து செல்லும் மாயந்தான் என்ன?

தொடர்ச்சியான போரினால் விடுதலைப் புலிகள் சோர்வடைந்து பலமிழந்து போனார்கள் என்பதை நம்பமுடியாதிருக்கிறது. ‘கிளிநொச்சி வீழ்ந்தது’ என்ற செய்தி சாதாரணர்களையே சாய்த்திருக்கிறது. அந்நகரை மையமாகக் கொண்டியங்கிய புலிப்போராளிகளுக்கு அது தாய்மடி போல. அதை விட்டுக்கொடுத்து நகரும்போது உலைக்களம் போல அவர்களது நெஞ்சம் கோபத்தில் கொதித்திருக்குமேயன்றி, ஓடித் தப்பினால் போதுமென ஒருபோதும் அவர்கள் கருதியிருக்கமாட்டார்கள். கரும்புலிகள் என்று தனியாக சிறப்புப் படையொன்று இருக்கின்றபோதிலும், விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள அனைத்துப் போராளிகளும் எந்நேரமும் தம்முயிரைத் தற்கொடை செய்யத் தயாரான கரும்புலிகள்தாம். கழுத்தில் சயனைட் குப்பி வடிவில் சர்வசதாகாலமும் மரணத்தைச் சுமந்து திரிகின்றவர்கள்தாம். அசாத்திய மனோபலமுடைய அதிமானுடர்களாக அறிந்தவர்களால் வியக்கப்பட கிற அவர்களால் இம்முறை மட்டும் தாக்குப்பிடிக்க முடியாமற் போனதென்பது வியந்துமாளாத ஒன்றாக இருக்கிறது.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வரலாறு தன் எழுதுகோலோடு கவனித்துக்கொண்டிருக்கிறது. இழப்பின் துயர் செறிந்த தூங்காத விழிகளோடு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்��
�ள். வெற்றிக் களிப்பில் வெறியுமிழும் பேரினவாதத்தின் கண்கள் மட்டும் மூடியிருக்கின்றன.

பின்னகரப் பணித்த பிரபாகரன் அவர்களது மனதுள் என்னதான் இருக்கிறது? கடலுக்குள் குதிக்கப்போகிறார்; கைதாகப் போகிறார் இன்னபிற சிறுபிள்ளைத்தனமான பிதற்றல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அவரது வியூகத்தின் மையப்புள்ளிதான் என்ன?

போர் என்ற புதிர் இம்முறை அவிழ்க்கப்பட முடியாததாக இருக்கிறது. மௌனத்தின் அடர்த்தியானது கேள்விகளைத் தூண்டுகிறது. ஊகங்களை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது.

எதிரியைத் தேடிப்போய் சண்டை பிடித்தது போதும்; அவனை நமது காலடியில் கொண்டுவந்து தலையில் மிதிப்பதுதான் தகும் என்ற தந்திரோபாயம்தான் உள்நகர்ந்து உள்நகர்ந்து சென்றதன் பின்னிருக்கும் காரணமா? குழலூதிச் செல்பவனைத் தொடர்ந்துபோய் தண்ணீருள் விழும் எலிகளாகிவிட்டனரா சிங்கள இராணுவத்தினர்? தென்னிலங்கையில் ஏதாவது தாக்குதல்கள் நடத்தவேண்டியிருந்தால் திசமகராம, கதிர்காமம் போன்ற காட்டுப்பகுதிகளுள் சென்று, பல நாட்கள் தங்கி, உளவு அறிந்து, அப்பகுதிகளில் வாழும் வேடுவர்களைத் துணைக்கழைத்து நீர்நிலைகள் அறிந்து, உணவு பெற்று…அரும்பாடுபடவேண்டும். தவிர, எவரேனும் காயப்பட்டால் தூக்கிவர இயலாது. முதலுதவி தவிர்த்து வேறெந்த சிகிச்சை வசதிகள் இரா. காடுகளில் வழி தடுமாறி அலையவும் நேரிடும். மாறாக போராளிகளுக்கு தமிழ்ப்பகுதிகளின் ஒவ்வொரு அங்குலமும் இங்கே கிணறு, இங்கே கடப்பு எ ்று கண்பாடம், கால்பாடம். இவ்வாறான நிலையில் ஏன் எதிரிகளின் கோட்டைக்குள் சென்று சென்று தாக்க வேண்டும்? போரைத் தமிழர்களின் எல்லைகளுள் நகர்த்திவிட்டால்…என்று நினைத்திருக்கலாம்.

இப்போது முன்னரங்க நிலைகளில் சண்டை போடுவது மட்டுந்தான் இலங்கை இராணுவத்தினரின் வேலையன்று; பிடித்த இடங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் வேண்டும். முழுப்படையினரையும் முன்னரங்கத்தில் குவிப்பதாயின் முதுகிலும் கண் இருந்தால்தான் சாத்தியம். ஆக, தக்கவைத்துக்கொள்வது, சண்டை பிடிப்பது என்ற இருவேறு திசைகளில் படையினரின் கவனம் சிதறுகிறது. தமிழர்களை ஒரு குறிப்பிட்ட சதுர கிலோ மீற்றரினுள் தள்ளியதன் மூலம் உச்சபட்ச இனவழிப்பைச் சாத்தியமாக்கியிருப்பதாகச் சிங்களப் பேரினவாதம் கருதுகிறது. ஆனால், மறுவளமாக, புலிகளது கண்காணிப்பை வேண்டும் சமராடுகளத்தின் எல்லைகள் சுருங்கியிருக்கின்றன. ஆனால், இலங்கை இராணுவத்தின் சமராடுகளம் விரிந்திருக்கிறது. ஒவ்வொரு அங்குலத்திலும் படையினரை நிறுத்திவைக்க வேண்டிய பதட்டத்தினுள் அவர்களைத் தள்ளியிருக்கிறது. இது விடுதலைப் புலிகளுக்கு ச் சாதகமானதாகவே இருக்கும்.

விடுதலைப் போராட்டத்தை இனவெறி அரசிடம் காட்டிக்கொடுத்த கருணாவின் கைங்கரியத்தினால், அவர் சொல்லும் தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே இராணுவத்தினரால் முன்னேற முடிகிறது என்றொரு கதையும் உண்டு. ஆனால், அது முற்றுமுழுதான உண்மையன்று. இயக்கத்தின் ஓர்மத்தை அறிந்த கருணாவுக்கே புலிகளின் பின்னகர்வு வியப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. நகர்வதுபோல் போக்குக் காட்டிக்கொண்டு ஒவ்வொரு தாக்குதலிலும் ஐம்பது அறுபது எனப் படையினரைப் பலிகொள்வதானது வெற்றிக் களிப்பில் மூழ்கியிருக்கும் பேரினவாதிகளின் கண்களில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு – விடுதலைப் புலிகள் படைபல ஆயுதபல ரீதியாக இத்தனை வளர்ச்சியுற்றிருக்காத ஒரு காலகட்டத்தில் பலாலி விமான நிலையத்தில் சென்று இறங்கிய இராணுவ விமானங்களைச் சுட்டுத் தரையிறக்கவும் தலைசுழலவும் வைக்க முடிந்திருந்தது. இப்போதோ ஒரு உலங்குவானூர்தியைக் கூட அவர்கள் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் இல்லை. பத்துத் தடவைகளுக்கு மேல் தென்னிலங்கையில் உயிர்மையங்களில் தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் திரும்பிவந்த விடுதலைப் புலிகளின் விமானங்களால், இந்த இக்கட்டான சூழலில் எதிரிப்படையின் மேல் சென்று இறங்கமுடியாதிருப்பது எதனால்? புலிகளின் ஆறு விமான ஓடுபாதைகளைப் பிடித்துவிட்டோம் என்று முழங்கும் அரச பீரங்கி, அந்த ஓடுபாதைகளில் ஓடிய விமானங்கள் எங்கு போயின என்பதைப் பற்றிக் கள்ளமௌனம் சாதிக்கிறது. (விமான ஓடுபாதைகளில் விடுதலைப் புலிகள் ம ோட்டார் வண்டிகளைத்தான் ஓட்டிக்கொண்டிருந்தார்கள் என்று கோத்தபாய ராஜபக்ஷ என்ற கோயபல்ஸ் சொன்னாலும் வியப்பதற்கில்லை.) அப்படியானால், விமானங்கள் எந்தவொரு கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன?
மீண்டும் அந்த மில்லியன் டொலர் கேள்விக்குத் திரும்புகிறோம். ‘எப்படிப் பின்னடைந்தார்கள்?’என்ற கேள்வி பிரபாகரன் அவர்களையும் விடுதலைப் புலிகளையும் அறிந்த பலருள்ளும் விடையற்று அலைந்துகொண்டிருக்கிறது. உலகெங்கிலும் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கும்; தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இந்தக் கேள்வியை ஒருவர் கண்களில் மற்றவர் காண்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தின் முன்னணியில் போராளிகள் நின்றிருந்தார்கள் எனில், பொருளாதார மற்றும் பின்பலமாக இருந்தவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், விடுதலையைத் தமது அரசியல் ஆதாயங்களுக்காக மலினப்படுத்தாத தமிழகத்தைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணத்தகுந்த சில அரசியல்வாதிகளும், இனப்பற்றாளர்களும், மத்திய அரசுக்குக் கட்டுண்டு இன்று கையறு நிலையில் கவலையோடிருக்கும் ஆறரைக் கோடி தமிழர்களுந்தான் இந்த வாழ்வுரிமைப் போராட்டத தின் ஆதாரமாக பின்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.

நேற்று கனடாவிலிருந்து தொலைபேசிய ஒரு நண்பர் சொன்னார் “நாங்கள் இடிந்துபோயிருக்கிறோம். சரியாக உறங்கி நீண்ட நாட்களாகின்றன. ஒரு மகத்தான, எதிர்பாராத திருப்பத்திற்காகக் காத்திருக்கிறோம்”

“எனது எண்பத்து நான்கு வயதான தாயார் சரியாகச் சாப்பிடுவதோ உறங்குவதோ இல்லை… எங்கள் பிள்ளைகள் தோற்றுப்போனார்களா? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறார்” என்றார் மற்றொருவர்.

“பிரபாகரன் திறமையான இராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல; அரசியல் நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம் தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம் உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்தியா நிலைமைகள் தெரிந்தபின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்”என்று அண்மையில் இணையத்தளச் செவ்வியொன்றில் இந்தியப் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் சொல்வதற்கிணங்க தகுந்த தருணத்திற்காக பிரபாகரன் காத்திருக்கிறாரா? உலக வல்லரசுகளில் முதன்மையானதும், சகல நாடுகளையும் அதட்டி உருட்டி அவற்றின் தலைவிதியை நிர்ணயிப்பதுமான அமெரிக்காவில், அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒபாமா, இருபது இலட்சம் பேர் முன்னிலையில் அமெரிக்க அதிபராக அண்மையில் பதவியேற்றார். ‘அடிவாங்கியவனுக்கே வல தெரியும்’என்ற கூற்றினை பிரபாகரன் அவர்கள் சிந்தித்திருக்கக்கூடும். ‘அடித்துப் பிடிக்க எங்களால் முடியும்; அங்கீகாரம் வேண்டும்’என்பது அவரது இன்றைய நிலைப்பாடாக இருக்கலாம்.

ஊகங்களும், கேள்விகளும், ஆதங்கமும், ஆற்றாமையும், துயரமும் சூழ்ந்திருக்கும் இக்கொடுங்காலத்தை ஒரு இமைத்திறப்பில் கடந்து மகிழ்ச்சிக்குள் நுழைந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நிச்சயமாக அது நடக்கும் என்றே உள்ளுணர்வு கூறுகிறது. இறந்தகாலத்தின் அற்புதங்கள் ‘கலங்காதீர்’என்று கண்துடைக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், உக்ரேன் என இலங்கையின் இனவழிப்புப் போருக்கு முண்டுகொடுக்க, தாங்கிப்பிடிக்க, தட்டிக்கொடுக்க பல நாடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அதனைக் காட்டிலும் அதிகமான நாடுகளில் (ஜேர்மனி, கனடா, இலண்டன், இந்தியா, சுவிஸ், நோர்வே, அமெரிக்கா…) ‘டயஸ்போரா’க்களாய் நாங்கள் இருக்கிறோம். எங்களோடு சத்தியம் இருக்கிறது. ‘வேடிக்கை மனிதரைப் போல்’ நாங்கள் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டோம்.

நன்றி
சுப்ரமணியன் குவைதில் இருந்து

 

Advertisements

9 responses

4 02 2009
ரவி வர்மா

புலிகளுக்கும் சிங்கங்களுக்கும் சண்டை வந்தால் புலிதான் வெல்லும் என்கிறது சாட்சியான வனம் …. உலக தமிழர்களின் அடையாள சின்னம் வீழ்ந்து விடாது … ஈழம் வெல்லும் உமது உள்ளுணர்வு நிஜமாகட்டும் …

4 02 2009
tamilanmanian

என் சிரம் தாழ்ந்த நன்றிகள் அய்யா ….

9 04 2009
Kiri

Nice & Thanks

13 01 2010
sekar 9789633774

nanthi anna

15 02 2010
Paulraj

nice

28 10 2010
guru

super

21 01 2011
Ambethkar

annan avargal unmaiyana thamizhanin ul unarvin pirathipalippu

24 08 2012
parthi

காத்திரு தமிழா! கலங்காமல்; நம் தலைவன் இருக்கிறார்.

8 09 2013
பாரத்

புலி பதுங்குவது பாய்வதற்கு…… அதிக பிடரியைக் கொண்ட வீரமற்ற சிங்கத்திடம் தோற்பதற்கு அல்ல…. தலைவா……..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: