இதையும் ஒருக்கா பாருங்களேன்-வன்னிக்கதை

http://eeladhesam.com/images/breaking/vannikkathai4.jpgஇங்கே காணப்படும் படங்கள் வைலைஞர்மடத்திற்கும் பொக்கணைக்கும் இடையில் பிரதான வீதியின் கரையே உள்ள இடத்தையே காண்கிறீர்கள்.

அது மார்ச் மாதம் நடுப்பகுதி (2009) புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு நானும் எனது ஊடக நண்பரும் எறிகணைத்தாக்குதலில் காயமடைந்த ஒரு இளைஞரை உந்துருளியில் ஏற்றிக்கொண்டு சென்றோம்.அவருக்கு காலில் தான் காயம்.பாவம் நடக்கமுடியாது.அவருக்கு உதவினோம்.
அவரை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருக்கும் போது எறிகணை குத்தும் சத்தம்.நான் நினைத்தேன் வேறு எங்கேயோ விழப்போகிறது என்று.

ஆனால் எங்களைக் கடந்த அதாவது வீதியில் இருந்து 15மீற்றர் தள்ளி எறிகணை வீழ்ந்து வெடித்தது.நாங்கள் மூவரும் வீதியில் ஊந்துருளியுடன் வீழ்ந்து விட்டோம்.எங்களுக்கு ஒன்றுமில்லை.
காயப்பட்ட இளைஞரை அருகில் இருந்த பதுங்குகுழிக்கு கொண்டு சென்றோம்.ஒருவேளை அடுத்த எறிகணை விழுந்தாலும் என்று.அப்பொழுது எறிகணை வீழ்ந்த இடத்தில் இருந்து ஜயோ,என்ரை மகனை காப்பாற்றுங்கோ,காப்பாற்றுங்கோ என்று ஒரு தாயின் கதறல்.அது காயமடைந்த ஒரு சிறுவனின் தாயார்.

இதில் காணப்படும் படத்தில் சிறுவனின் தாயாரும் மாமாவும் அவனைத் தூக்குவதையே காண்கிறீர்கள்.

பதுங்குகுழி வாசலிலேயே அச்சிறுவன் காயப்பட்டு விட்டான்.அவனின் பெயரை நான் மறந்து விட்டேன்.அவ்விடத்திற்கு நான் மட்டுமே சென்றேன்.சிறுவனின் முதுகுப்பக்கம் பலத்த காயம்.காயத்துக்கு கட்டுப்போட்டு விட்டோம்.பாவம் அம்மா,துடிக்கிற துடிப்ப என்னால பார்க்கமுடியாமல் போச்சு.என்னவிடையம் என்றால் அவர்கள் பகுதி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முள்ளிவாய்க்கால் நோக்கி நகரத் தொடங்கிவிட்டார்கள்.இராணுவத்தினரும் பச்சைப்புல்மோட்டையில் இருந்து முன்னேறுவதற்காக முயன்று வந்தனர்.வீதியில் ஒரு சனமும் இல்லை.
ஒன்று இரண்டு இயக்க உந்துருளிகள் போய்க்கொண்டிருந்தது.என்ன செய்வது சிறுவனை எப்படியாவது புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு கொண்டு போகவேண்டும்.எனது நண்பரையும் முதல் காலில் காயப்பட்ட இளைஞரையும் அப்படியே பதுங்குகுழியில் இருக்கவிட்டு சிறுவனின் மாமாவும் நானும் எனது உந்துருளியில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். பிறகு நான் அச்சிறுவனை காணவில்லை.அவன் பாவம் என்ன?..
அவன் இருக்கிறானா இல்லையா என்று கூட எனக்கு தெரியாது.தம்பி நீ எங்கையாவது இருந்தால் இதையும் கட்டாயமா ஒருக்கா பாத்திடவேணும் சொல்லிப்போட்டன்.

http://eeladhesam.com/images/breaking/vannikkathai4.jpgஇது எந்த இடம் என்று நினைக்கிறீர்கள்.இது சுதந்திரபுரம் பொதுநோக்கு மண்டபத்திற்கு முன்வாசல்.இந்த கட்டடத்தில் தான் வைத்தியசாலை இயங்கி வந்தது.இதில உந்துருளியில் ஒருத்தர கொண்டு வாறினம்.

ஏனென்று யோசிக்கிறீர்களா??09.02.2009 அன்று காலை சிறீலங்கா படையினரின் தாக்குதல்கள் கொஞ்சம் கூடவாக இருந்தது.நான் அன்று உடையார்கட்டுப்பகுதியில் நின்றிருந்தேன்.சுதந்திரபுரம் கொலணிப்பகுதியை நோக்கி படையினர் முன்னேறி வந்ததோடு பலத்த எறிகணைத்தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.
இதில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதோடு படுகாயமடைந்த பலர் சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலையில் இறந்ததை நினைக்க கவலையாக இருக்கு.

அன்று 8.30 மணி இருக்கும்.நானும் எனது நண்பரும் இச்சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதி நோக்கி சென்றோம்.நகர முடியாத அளவுக்கு வாகனநெருசல் அதற்குள்ளால எப்படியும் போய்விடவேண்டும் அந்த இடத்திற்கு என்ற நோக்கம் தான்.வாகன நெருசலைப்பார்த்தால் ஒன்றும் செய்யமுடியாது ஒருவாறு எமது ஊந்துருளியை ஒரு வீட்டில் விட்டு விட்டு நடந்தும் ஓடியும் ஒருவாறு சுதந்திரம் வைத்தியசாலைக்கு சென்றோம்.அங்கு ஒரே அழுகுரல்தான்.நிறைய சனம் காயப்பட்டு இருக்குதுகள்.ஆனால் மருந்து கட்ட முடியாத நிலையில் வைத்தியர்களும் தொண்டர்களும் பெரும் அவதிப்பட்டு கொண்டு நின்றார்கள்.

அங்கும் ஒரு சில புகைப்படங்கள் எடுத்தேன்.காயப்பட்டவா்களையும் துாக்கி பாயில் படுக்கவைத்து விட்டு திரும்பிப் பார்த்தேன்.என்னுடன் வந்த நண்பரின் சகோதரி.கழுத்திலயும் இடுப்பிலும் காயம்.அவ மயங்கி விட்டா.நான் நினைத்தேன் அவா இறந்து விட்டா என்று.உறவினர்கள் எல்லாரும் அழுதுகொண்டு இருந்தார்கள்.சரியென்று நான் கொலணிப்பக்கம் போக முடிவெடுத்தேன்.அங்க நிறைய சனம் காயத்துடன் இருப்பதாகவும் கொண்டுவர முடியாத நிலையில் உள்ளதாகவும் அங்கு வந்தவர்கள் சொன்னார்கள்.அப்படியே நடந்து வைத்தியசாலை முன்பக்கத்தில படுகாயமடைந்த ஒரு ஜயாவை ஊந்துருளியில் வைத்து உருட்டிக்கொண்டு வருவதை அவதானித்தேன்.

 vannikathai

அப்போது எடுத்த படங்கள் இவை.அந்த அண்ணை ஆக்களுக்கும் வைத்தியசாலை எங்கயென்று தெரியாமல் தடுமாறவே வழியில் நின்ற பாதை காட்டிவிடுறார் நீங்கள் படத்தை ஒருக்கா பாருங்க விளங்கும்.அந்த ஜயா வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வரைக்கும் உயிர் இருந்தது.ஆளை இறக்கி ஒரு சில நிமிடங்களில் அவரும் செத்து விட்டார்.பாவம் அவருடைய மகனும் மனைவியும் இறந்துவிட்டதாக அங்க வந்த அவரின் மகள் கதறி அழுவதை பார்க்க எனக்கு சரியான வேதனையா போச்சு.

பிறகு நான் கொலணிப்பக்கம் போனன்.ஒரு அரை கிலோமீற்றர் தூரம் போய் இருப்பேன்.ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிறுவனை தூக்கிக்கொண்டு ஜயோ அவனை தூக்குங்கோ தூக்குங்கோ நான் கனதூரத்தில இருந்து கொண்டு வாறன் என்று குளறிக்கொண்டு வந்தார்.நான் உடனே அந்த சிறுவனை தூக்கிக்கொண்டு வைத்தியசாலை மட்டும் ஓட்டம் தான்.இடை வழியில் தான் சிறுவனைப்பார்த்தேன்.சிறுவனின் நெஞ்சில் பெரிய காயம் ஒருவாறு வைத்தியசாலையில் கொண்டு போட்டன்.அங்க சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லை இவனும் இறந்து விட்டான்.இது தான் படம் பாருங்க.

அன்று மட்டும் 125 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.300 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ளனர்.என்ன செய்ய என்னால இயன்ற அளவுக்கு காயப்பட்ட மக்களை கொண்டுபோய் வைத்தியசாலையில் விட்டன்.பலர் என்ர கண்முன்னாலேயே செத்ததை என்னால மறக்க முடியாது.நீங்கள் ஒருக்கா சொல்லுங்க பாப்பம்.நீங்கள் மறப்பியளே?

http://eeladhesam.com/images/breaking/vannikkathai4.jpgஇந்த படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறன்.இது எத்தனை மணிக்கு எடுத்தது தெரியுமோ?

அதிகாலை 2.00 மணி இருக்கும்.நான் அன்று வீட்டில் தான் இருந்தனான்.நல்ல நித்திரை.திடீரென்று குண்டுச்சத்தம் கேட்டு எழும்பினேன்.1.30 மணி இருக்கும்.பரா வெளிச்சம்.இரண்டு கிபிர் விமானங்கள் மாறி மாறி குண்டு போடுது.இரவு நேரம் அடிச்சதால எப்படியும் சனங்களுக்கு பாதிப்பு வரும் என நினைத்துக்கொண்டு எனது ஊந்துருளியில் தாக்குதல் இடம் பெறும் பகுதிநோக்கி சென்று கொண்டிருந்தேன்.

சுண்டிக்குளம்சந்தியில் சிறுது நேரம் நின்று பார்த்தேன் சுண்டிக்குளம் வீதியில் அண்மையில் தான் தாக்குதல் இடம்பெற்றிருந்ததை ஊகிக்கமுடிந்தது.ஒரு சனமும் வீதியில் இல்லை.அந்த நேரம் யார் வருவார்கள்?ஊந்துருளிக்கு எண்ணையும் காணாது.கனதூரம் ஓடினால் உருட்டத்தான் வேணும்.எப்படியும் வைத்தியசாலைக்கு தகவல் வரும்தானே.அங்கயும் போனன் வைத்தியசாலையிலும் ஒன்றுமில்லை.அவர்கள் என்னைக்கேட்டார்கள் எங்க அடிச்சதென்று.

என்ன செய்யிற திரும்ப சுண்டிக்குளம் சந்தி நோக்கி போனன்.அப்ப ஊந்துருளியில் நடுவில ஒருத்தர இருத்தி ஒரு அண்ணை கத்திக்கொண்டு வாரார்.உடனே நானும் அவர்களுக்கு பின்னால வைத்தியசாலைக்கு போனன்.இதில ரோஷ்கலர் சேட்டோட நீக்கிறார்.அவர்தான் முதன் முதலில் எங்க கிபிர் அடிச்சது அங்க சனங்கள் நிறைய இருந்தது.

VANNIKKATHAI

வெளியில வரமுடியாமல் இருக்கு.காப்பாற்றுங்க காப்பாற்றுங்க என அழுதார்.அதன் பின்பு தான் தருமபுரம் வைத்தியசாலையில் இருந்து இரண்டு அம்புலன்ஷ் வண்டிகளை உடன் செல்லுமாறு வைத்தியர்கள் சொன்னார்கள்.அதன் பிறகு எடுத்த இரண்டாவது படமே ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு வாற படம்.இதில என்ன விடயமென்றால் குவாட்டஷ்களில் நின்ற வைத்தியர்கள்,பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனே வைத்தியசாலைக்கு வந்து பணி செய்ததை என்னால மறக்கமுடியாது.இதில 5 பேர் செத்திருக்கினம்.18 பேர் காயப்பட்டிருக்கினம்.இரவு நேரம் படம் எடுத்ததால பின்னுக்கு இருட்டா இருக்குது என்ன.

இதில தூக்கிக்கொண்டு வாற படம் தான் ஈழநாதம் பத்திரிகையில் முன் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.இந்த படங்கள் முதன் முதலில் இந்த பத்திரிகையில் தான் வெளிவந்தது.பிறகு நான் விடிய ஆறு மணி இருக்கும் கிபிர் அடிச்ச இடத்திற்கு போறன்.அங்க என்னத்தை பார்க்கிறது தீவு தான்.3 நாட்களாக பெய்த மழையால் அந்த இடம் வெள்ளக்காடாக இருந்தது.ஒரு நடுத்துண்டில் தான் குடிசைகள் அமைக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் வசித்து வந்தார்கள்.

அப்படியே போனா ஒரு வாய்க்கால் முழங்காள் அளவுக்கு மேல் தண்ணி.அதையும் கடந்து தாக்குதல் நடந்த இடத்திற்கு போனன்.கிட்டத்தட்ட 15 குடிசைகளுக்கு மேல் முற்றாக அழிவடைந்து விட்டது.அங்க இருந்த மீதி சனங்கள் வீதியில் கரையில் இருந்தது.குழந்தைகளுக்கு சாப்பாடு இல்லை.எல்லாச்சனமும் அழுதுகொண்டிருந்தினம்.சிறிது நேரத்தில பாத்த ரி.ஆர்.ஓ தொண்டர்கள் பாணும் தேநீரும் கொடுத்தார்கள்.அதக்குப்பிறகு தான் அங்க இருந்த சனங்களோட நான் கதைச்சன்.

இதில ஒரு அம்மா சொன்னா.”நாங்கள் தம்பி நெத்தலியாறு பாலத்திற்கு அருகில தான் இருந்தனாங்கள்.அங்க 3 நாளா ஒரு மழை எங்கட குடிசை எல்லாம் தண்ணீல போட்டுது.பிறகு தான் ரி.ஆர்.ஓ தொண்டர்கள் தான் இந்த இடத்தில உள்ள குடிசைக்குள்ள கொண்டு வந்து விட்டினம்.என்ன செய்ய.இங்கயும் ஒரே தண்ணி.அங்க பாருங்க அந்த பிட்டியில தான் நாங்கள் இருந்தோம்.நான் ஒரு குண்டோட பின்பக்கத்தால ஓடினன்.பின்னும் தம்பி தண்ணி தான்.அப்படியே என்ர பிள்ளையோட தண்ணிக்குள்ளே படுத்துட்டன்.இங்க பாருங்க உடுப்பெல்லாம் நனைஞ்சு போச்சு.”

என அழுதபடி செல்லிக்கொண்டிருந்தார்.பாவம் சனங்கள்.அங்க இருந்தவர்கள் மாற்றுடை இல்லாமல் தவிச்ச தவிப்பு தான் பரிதாபம்.பாத்தியளே இரவு நேரத்திலயும் வந்து அடிச்சிருக்கிறான்.எவளவு கஷ்ரப்பட்டிருக்கும் சனம் என்ன?இப்பவும் நினைக்க வேதனையாத்தான் இருக்கு.

இதையும் ஒருக்கா பாருங்களேன் – வன்னிக்கதை பாகம் 4

http://eeladhesam.com/images/breaking/vannikkathai4.jpg21.03.2009 அன்று பொக்கணையில் இருந்து நானும் ராசா அண்ணையும் வலைஞர்மடத்திற்கு போயிருந்தோம்.கனதூரம் இல்லை.1கிலோமீற்றருக்குள்ள தான் வரும் வலைஞர்மடம்.இதில பாருங்க புகையா தெரியுது படம்.அதில சைக்கிள்ள உருட்டிக்கொண்டு வாற அண்ணைக்கு கொஞ்சம் அங்கால தான் நின்று கதைச்சுக்கொண்டு இருந்தனாங்கள். vannikkathai

வலைஞர்மடம் சந்திக்கு பக்கத்தில தான்.மதிய நேரம் இருக்கும்.செல் ஒன்று கூவிய சத்தம் கேட்டது.எப்படி படுத்தனோ தெரியாது படுத்துட்டன்.அதில பாருங்க பனைமரங்களுக்கு பின்னால தான் செல் விழுந்தது.விழுந்த அடுத்த விநாடிகளில் எடுக்கப்பட்ட படம் தான் புகையோட இருக்கிற படம்.தரப்பாள் கூடாரத்திற்கு மேல தான் விழுந்தது.நான் ஓடிப்போனேன்.அங்க ஒரு 20 வயது இருக்கும் பெண்பிளைப்பிள்ளை குழறிக்கொண்டு இருந்தா.”நான் கமராவோட தானே போனான்.எனக்கு நல்ல பேச்சு “கமராவைதூக்கிக்கொண்டு வந்திடுவியள்.காயப்பட்ட ஒருவரையும் தூக்கமாட்டியள்.படுபாவியள்”.

அப்படியே இப்படியோ என்று நல்ல பேச்சு.இது எனக்கு புதுசும் இல்லை.ஆச்சரியமும் இல்லை.அந்த பிள்ளையின் பேச்சை நான் கேட்காத மாதிரி ஓடிப்போய் சாறம் ஒன்றை விரிச்சு அந்தப்பிள்ளையின் அண்ணையை தூக்கி சாறத்தில் படுக்க வைச்சன்.பிறகு ரி.ஆர்.ஓ தம்பிமார் வந்தாங்கள் அவங்களோட எப்பிடியோ றோட்டுக்கு கொண்டு வந்துட்டன்.இதுவரைக்கும் அந்த அண்ணை இறந்தது தங்கச்சிக்கு தெரியாது.பாவம்.நான் ஏன் தூக்கினேன் என்றால் தூக்காமல் படம் எடுத்துக்கொண்டு நின்றிருந்தால் நான் தூக்காமத்தான் அந்த அக்கா செத்தவா என்று அந்த பிள்ளை காலம் பூரா கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் தானே.இந்த சம்பவத்தில் 5பேர் செத்தவர்கள் 12 பேர் காயப்பட்டவர்கள்.

இந்த இடத்தில நான் ஒன்றை சொல்ல வேணும்.தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தனது பணிகள் அனைத்தும் நிறுத்தி இடம்பெயர்ந்தவர்களுக்கு கஞ்சி வழங்குவதும்,காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு சேர்ப்பிப்பதும்.இறந்தவர்களின் உடல்களை புதைப்பதும் என்று அந்த நிறுவனத்தின் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர்.உண்மையில் மனிதாபிமான முறையில் இவர்கள் இந்த வேலைகளை செய்தாலும் ஒவ்வொரு உடல்களையும் தூக்கும் போது இவர்களின் கண்களில் நீர் சொரிவதையும் நான் கவனிக்க தவறியதில்லை.இவர்களுடைய பணிகளை இரண்டு வரிகளில் சொல்லிவிட முடியாது.

தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள் எறிகணைகள் வீழ்ந்த அடுத்த கணமே அவ்விடத்திற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபடுவதை நான் அறிவேன்.சரி,பிறகு நான் எல்லா காயக்காரரையும் ஒருவாறு தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர்களின் உதவியோட வைத்தியசாலைக்கு அனுப்பியாச்சு.பாவங்கள் எங்கட சனங்கள் இறந்தவர்களின் உறவுகளின் கதறல்கள் இப்பவும் எனக்கு கேட்கிறமாதிரி இருக்கு.நீங்கள் சிலநேரம் நினைப்பியள் என்ன,இவர் பக்கத்தில நின்ற மாதிரி கதைக்கிறார்.இவருக்கு ஒன்றும் இல்லாம உயிரோட வந்தவரோ என்று.எப்படியோ தப்பிட்டன்.இவ்வளவு சனம் தப்பி வந்தது தானே அவர்களில் ஒருத்தரா நினையுங்கோவன்.

http://eeladhesam.com/images/breaking/vannikkathai4.jpgஇந்த படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறன்.இது எத்தனை மணிக்கு எடுத்தது தெரியுமோ?

அதிகாலை 2.00 மணி இருக்கும்.நான் அன்று வீட்டில் தான் இருந்தனான்.நல்ல நித்திரை.திடீரென்று குண்டுச்சத்தம் கேட்டு எழும்பினேன்.1.30 மணி இருக்கும்.பரா வெளிச்சம்.இரண்டு கிபிர் விமானங்கள் மாறி மாறி குண்டு போடுது.இரவு நேரம் அடிச்சதால எப்படியும் சனங்களுக்கு பாதிப்பு வரும் என நினைத்துக்கொண்டு எனது ஊந்துருளியில் தாக்குதல் இடம் பெறும் பகுதிநோக்கி சென்று கொண்டிருந்தேன்.

சுண்டிக்குளம்சந்தியில் சிறுது நேரம் நின்று பார்த்தேன் சுண்டிக்குளம் வீதியில் அண்மையில் தான் தாக்குதல் இடம்பெற்றிருந்ததை ஊகிக்கமுடிந்தது.ஒரு சனமும் வீதியில் இல்லை.அந்த நேரம் யார் வருவார்கள்?ஊந்துருளிக்கு எண்ணையும் காணாது.கனதூரம் ஓடினால் உருட்டத்தான் வேணும்.எப்படியும் வைத்தியசாலைக்கு தகவல் வரும்தானே.அங்கயும் போனன் வைத்தியசாலையிலும் ஒன்றுமில்லை.அவர்கள் என்னைக்கேட்டார்கள் எங்க அடிச்சதென்று.

என்ன செய்யிற திரும்ப சுண்டிக்குளம் சந்தி நோக்கி போனன்.அப்ப ஊந்துருளியில் நடுவில ஒருத்தர இருத்தி ஒரு அண்ணை கத்திக்கொண்டு வாரார்.உடனே நானும் அவர்களுக்கு பின்னால வைத்தியசாலைக்கு போனன்.இதில ரோஷ்கலர் சேட்டோட நீக்கிறார்.அவர்தான் முதன் முதலில் எங்க கிபிர் அடிச்சது அங்க சனங்கள் நிறைய இருந்தது.

VANNIKKATHAI

வெளியில வரமுடியாமல் இருக்கு.காப்பாற்றுங்க காப்பாற்றுங்க என அழுதார்.அதன் பின்பு தான் தருமபுரம் வைத்தியசாலையில் இருந்து இரண்டு அம்புலன்ஷ் வண்டிகளை உடன் செல்லுமாறு வைத்தியர்கள் சொன்னார்கள்.அதன் பிறகு எடுத்த இரண்டாவது படமே ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு வாற படம்.இதில என்ன விடயமென்றால் குவாட்டஷ்களில் நின்ற வைத்தியர்கள்,பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனே வைத்தியசாலைக்கு வந்து பணி செய்ததை என்னால மறக்கமுடியாது.இதில 5 பேர் செத்திருக்கினம்.18 பேர் காயப்பட்டிருக்கினம்.இரவு நேரம் படம் எடுத்ததால பின்னுக்கு இருட்டா இருக்குது என்ன.

இதில தூக்கிக்கொண்டு வாற படம் தான் ஈழநாதம் பத்திரிகையில் முன் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.இந்த படங்கள் முதன் முதலில் இந்த பத்திரிகையில் தான் வெளிவந்தது.பிறகு நான் விடிய ஆறு மணி இருக்கும் கிபிர் அடிச்ச இடத்திற்கு போறன்.அங்க என்னத்தை பார்க்கிறது தீவு தான்.3 நாட்களாக பெய்த மழையால் அந்த இடம் வெள்ளக்காடாக இருந்தது.ஒரு நடுத்துண்டில் தான் குடிசைகள் அமைக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் வசித்து வந்தார்கள்.

அப்படியே போனா ஒரு வாய்க்கால் முழங்காள் அளவுக்கு மேல் தண்ணி.அதையும் கடந்து தாக்குதல் நடந்த இடத்திற்கு போனன்.கிட்டத்தட்ட 15 குடிசைகளுக்கு மேல் முற்றாக அழிவடைந்து விட்டது.அங்க இருந்த மீதி சனங்கள் வீதியில் கரையில் இருந்தது.குழந்தைகளுக்கு சாப்பாடு இல்லை.எல்லாச்சனமும் அழுதுகொண்டிருந்தினம்.சிறிது நேரத்தில பாத்த ரி.ஆர்.ஓ தொண்டர்கள் பாணும் தேநீரும் கொடுத்தார்கள்.அதக்குப்பிறகு தான் அங்க இருந்த சனங்களோட நான் கதைச்சன்.

இதில ஒரு அம்மா சொன்னா.”நாங்கள் தம்பி நெத்தலியாறு பாலத்திற்கு அருகில தான் இருந்தனாங்கள்.அங்க 3 நாளா ஒரு மழை எங்கட குடிசை எல்லாம் தண்ணீல போட்டுது.பிறகு தான் ரி.ஆர்.ஓ தொண்டர்கள் தான் இந்த இடத்தில உள்ள குடிசைக்குள்ள கொண்டு வந்து விட்டினம்.என்ன செய்ய.இங்கயும் ஒரே தண்ணி.அங்க பாருங்க அந்த பிட்டியில தான் நாங்கள் இருந்தோம்.நான் ஒரு குண்டோட பின்பக்கத்தால ஓடினன்.பின்னும் தம்பி தண்ணி தான்.அப்படியே என்ர பிள்ளையோட தண்ணிக்குள்ளே படுத்துட்டன்.இங்க பாருங்க உடுப்பெல்லாம் நனைஞ்சு போச்சு.”

என அழுதபடி செல்லிக்கொண்டிருந்தார்.பாவம் சனங்கள்.அங்க இருந்தவர்கள் மாற்றுடை இல்லாமல் தவிச்ச தவிப்பு தான் பரிதாபம்.பாத்தியளே இரவு நேரத்திலயும் வந்து அடிச்சிருக்கிறான்.எவளவு கஷ்ரப்பட்டிருக்கும் சனம் என்ன?இப்பவும் நினைக்க வேதனையாத்தான் இருக்கு.

28.01.2009 வழமை போலவே அன்றும் எமது பணிகளுக்காக ஆயத்தமானோம்.நான் கிணற்றடியில நின்றனான்.உடையார்கட்டுப்பகுதியில் எவரும் இடம்பெயரவில்லை.

vannikkathai 5

 ஒரு 7.00 மணி இருக்கும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் சத்தம்.நான் நினைச்சன் கொஞ்சம் தூரவாக இருக்குமோ என்று குளிப்பமென்று ஆயத்தமாக ஜந்தாறு செல் நான் இருந்த ஒழுங்கை அடுத்தடுத்து விழுந்து வெடித்தது.ஓடிப்பேய் அருகில் இருந்து பதுங்குகுளிக்குள்.செல் அடி குறைஞ்சு போச்சு.

 அப்படியே நானும் எனது நண்பரும் உடையார்கட்டு பாடசாலையில் இயங்கி வந்த வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்தோம்.வீதியெங்கும் இறந்தவர்களின் உடல்கள்.வீதி கரையே தறப்பாளில் வசித்தவர்களில் பலர் சிதறிக்கிடக்கிறார்கள்.கூடாரங்களுக்கு மேல் தென்னை மரங்கள் முறிந்து கிடக்குது.நான் உந்துருளியில் உடையார்கட்டு வார்(டீயுசு) ஒழுங்கைக்கு வர மீண்டும் செல் அடி.அருகில் விழுந்து கொண்டிருந்தது.10 நிமிடம் வீதியின் கரையே உள்ள பள்ளத்தில் கிடந்தோம்.பின்னர் உந்துருளியை ஷ்ராட் பண்ணினால் அது தன்னுடைய வேலையை காட்ட தொடங்கிவிட்டது.

நாங்கள் இப்ப இரண்டும் கெட்டான் நிலையில் நிக்கிறம்.ஒன்று அந்த இடத்தில் இருந்து வைத்தியசாலைக்கு போகவேண்டும் அல்லது திரும்ப நாங்கள் இருந்த இடத்திற்கு போகவேண்டும்.செல் அடியென்றால் சொல்லி வேளையில்லை.வீதியில் ஒரு சனமும் இல்லை.ஒரு வேளை  ஆமி கிட்ட வந்திட்டானோ. சீ.. சீ.. அப்படியென்றால் எப்படியாவது தெரியவரும் தானே என்று நினைச்சுக்கொண்டு உந்துருளியை உருட்டிக்கொண்டு வைத்தியசாலைப்பக்கம் போனோம்.போகும் வீதிக்கரையில் ஒரு அம்மா 45 வயது இருக்கும் செத்தபடி சுருண்டு கிடந்தா.அந்தம்மாவையும் கடந்து உந்துருளியை வைத்தியசாலைக்கு முன் கடைத்தாவரத்தில் விட்டுவிட்டு திரும்பிப்பார்க்க வீதியில் உழவு இயந்திரம் ஒன்று எரிஞ்சபடி கிடந்தது.

அதையும் படம் பிடித்துக்கொண்டு உள்ளே போனன்.அங்க என்ன செல் அடியில் காயப்பட்டவர்கள் இறந்தவர்கள் என கனசனம்.எல்லா விபரங்கள் படங்கள எடுத்துக்கொண்டு இருக்க வைத்தியசாலைவளாகத்தில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தது.இதில 5 நோயாளர் காவுவண்டிகள் முற்றாக சேதமடைந்தது.நான் உடனே போய் படம் பிடிச்சனான்.பிறகு உடையார்கட்டு,சுதந்திரபுரம் பகுதியில் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்கு வாகனம் இல்லையென்ற தகவல் வைத்தியசாலைக்கு கிடைக்கவே அங்க கதவில்லாத ஒரு பழைய நோயாளர் காவு வண்டி இருந்தது.

அது இயங்குநிலையில் இருந்தது.அதில் வைத்தியசாலை பணியாளர்கள் இருவர் செல்ல ஆயத்தமாக நானும் அதில ஏறிப்போனேன்.சுதந்திரபுரம் பகுதியில் காயமடைந்த இறந்தவர்கள் உடல்களை எடுத்து கொண்டு வைத்தியசாலைக்கு வரும் வழியில் நான் 45 வயது அம்மா என்று சொன்னன்.அந்த அம்மாவை நானும் றைவர் அண்ணையும் போய் தூக்கினோம். கடவுளே!அந்த அம்மா சாகவில்லை கையை நான் பிடிக்க அம்மா….!என்ற முனகல் சத்தம் வந்தது.கிட்டத்தட்ட நான் அந்த அம்மாவை பார்த்து 2 மணித்தியாலயம் ஆச்சு.நான் செத்துபோனா என்று தானே நினைச்சன்.பாவம் அம்மா.நான் அப்ப ஒன்றும் செய்யேலாது அதில ஒரே செல்லடியாய் இருந்தபடியா நான் அந்த அம்மாவை தூக்கமுடியாம போச்சு.

சரியென்று தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு போக வைத்தியசாலை வாசலில் அம்மாவின் கை சோர்ந்து விழுந்தது.அம்மா செத்து போனா.வாகனத்தை கொண்டு போய் வைத்தியசாலைக்கு முன்பாக விட்டிட்டு றைவரும் போட்டார்.கதவு இல்லைத்தானே.வெளியில் நின்று பார்த்தால் அம்மா செத்துக்கிடக்கிற தெரியும்.அந்த அம்மாவின் மகன் ஏற்கனவே காயப்பட்ட ஒருவரை தூக்கிக்கொண்டு மருந்து கட்டிக்கொண்டு நின்றவர்.அப்படியே அந்த வாகனத்தை திரும்பிப்பார்த்தார்.தாயின் சாறியை கண்டுவிட்டு அம்மா…..!கத்திக் கொண்டு ஓடிப்போனார்…..மிகுதியை அடுத்த வாரம் சொல்லுறன் கேளுங்கோவன்…

Advertisements

One response

26 04 2010
KATHIR

Anaithitrkkum Oru Mudivu Varum ! Viraivil Ethirpaarungal !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: