014 மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல்

003மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல்தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் சார்பாக ”தமிழீழ மாணவர்கள் போராட்டக் குழு” என்ற ஒரு அமைப்பை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
பல கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் இவ்வமைப்பில் இணைந்துள்ளனர். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த போராட்டக் குழு தொடங்கப்பட்டுள்ளது.அவர்கள் கீழ்க் கண்ட கோரிக்கையை வலியுறித்தி சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் செய்யும்பொழுது அவர்களை காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகள்:

1. இந்திய அரசே போரை நிறுத்து! ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்று!

2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!

3. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

காவல் துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பிறகு அந்த மாணவர்கள் சாகும் வரை உண்ணா நிலையை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

நெல்லையில் நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் கைது

ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லையில் இன்று முழு கடையடைப்பும் வேலை நிறுத்தமும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் காவல்துறையினர் கடை உரிமையாளர்களை மிரட்டி கடைகளைத் திறக்க வைத்தனர். இதனையும் மீறி பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டே இருந்தன. காவல்துறையினரின் நெருக்கடியைத் தவிர்க்க பல இடங்களில் கடை உரிமையாளர்கள் கடைகளின் பக்கம் வருவதையே தவிர்த்து விட்டனர். காவல்துறையினருடன் மாவட்டத் தி.மு.க.வினரும் உடன் சென்றதாக கூறப்படுகிறது.

001

பொது வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தி வந்த திருநெல்வேலி மாவட்ட தமிழர் களத்தின் பொறுப்பாளர் மை.பா. சேசுராசன், மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் செந்தில் மள்ளர், குடும்பனார், ம.தி.மு.க. பொறுப்பாளர் நிஜாம், விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டச் செயலாளர் மோகன், செல்லையா பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சண்டுகவேலு, காசி விசுவநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இளையாங்குடியில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் பேரணி!

இன்று ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்தினார்கள். 

ஈழத்தில் தமிழருக்கு எதிராக இந்தியா மற்றும் இலங்கைப் படைகள் நடத்தும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் விதமாக துண்டறிக்கைகள், புகைப்படங்கள் ஆகியன தமிழர்களம் சார்பாக பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. அவர்களுக்கு எதிராக கடுமையான முழக்கங்களும் எழுப்பப்பட்டன. 

இதில் சிவகங்கை மாவட்டத்தின் தமிழர்களப் பொறுப்பாளர் திரு. அறிவழகன் மற்றும் இம்மானுவேல் தேவந்திரர் பேரவை உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மற்றும் பல தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

002

நன்றி : தமிழ்வின்

குவைதில் இருந்து சுப்ரமணியன்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: