*தமிழ் ஈழம் பற்றிய – குவைத் தமிழர்கள் நிலைப்பாடு ?*

 திரு .இராவணன் கருத்து

v  ஈழத்தின் வரலாறு பற்றிய உங்கள் கருத்து ?

ஈழ தமிழர்களை இரண்டாக பிரிக்கலாம் யாழ் தமிழர்கள் தொட்ட வேலைக்கு சென்ற புலம் பெயர்ந்த தமிழக தமிழர்கள் என்று பிரிக்கலாம் இலங்கை சுதந்திராதிருக்கு பின்பில் இருந்து தமிழர்களுக்கு எதிரான விடயங்கள் இலங்கை அரசால் நாடதபடுகின்றது என்பது மறக்க மறுக்க முடியாத உண்மை .

v  ஈழத்தின் பிரதிநிதியாக பிரபாகரனை சொல்லலாமா ?

கண்டிப்பாக .அவர் தான் ஈழத்தின் சரியான பிரதிநிதி .எத்தனையோ வசதிகள் இருந்தும் நம் இனத்திற்காக எத்தனையோ துயரங்களை சுமந்து கொண்டு இன்றளவும் களத்தில் நிற்கும் அவர் தான் சரியான தேர்வு .

v ஈழ விடயத்தில் பெய்ரயகட்சி காங்கிரஸ் நிலைப்பாடு சரியானதா ?

ஒரு இன போராளிகளை இந்த காங்கிரஸ் திவீர வாதிகள் என்ற தவறான பரப்புரைகளை செய்து வரகின்றதுஆனால் இன்று மக்களிடையே  நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இவர்கள் முன் வைக்க கூடிய ராஜீவ் கொலை வழக்கு பற்றிய விடயங்கள் ஈழ இன படுகொலையில் மாண்டு  போகின்ற நம் இன மக்களுக்கு எதிரான விடயம் தான் ஒரு குறிப்பை சில்லவேண்டும் என்றால் உதவி செய்யாத காங்கிரஸ் அரசு . ஆயுதம் அனுப்பாமல் இருந்தாலே போதுமானது .ஆனால் ஒரு இனம் அழிய காங்கிரஸ் கட்சி அதற்க்கு துணை போய்கொண்டிருகின்றது  என்பது தான் உண்மை .ஆனால் வருகின்ற தேர்தலில் தமிழக மக்கள் இதற்கு சரியான முடிவை சொல்ல்வார்கள்

v  ஈழ அகதிகள் இந்தியாவில் மகிழ்வான நிறைவான வாழ்கையை பெற்றுள்ளணர ?

சொந்த நாட்டை விட்டு அகத்திய வந்த இடத்தில் மகிழ்வு பற்றி பேசுவது சற்றுமுரண்பாடான விடயம் தான்

v ஈழ தமிழர் ஆதரவு போராட்ட தலைவர்களை வரிசைபடுதுங்கள் ?

 வைகோ ,சுப.வீ ரபண்டியன் ,சீமான் ,பழ.நெடுமாறன் .

v  ஈழ தமிழர் செய்திகளை முழுமையாக உண்மையாக வெளியிடும் ஊடகம் எது ?

தொலைக்காட்சி மக்கள் செய்திகள்

செய்திதாள்கள்இல்லை

இதழ்கள்ஜுவீ

v ஈழ தமிழர் செய்திகளை முழுமையாக கிடைக்கின்றதா ?

இல்லை

v குவைதில் ஈழ தமிழர் பற்றிய செய்திகளை முழுமையாக கிடைக்கின்றதா ?

கிடைக்கின்றது .நல்ல பரப்புரைகள் மூலம் இது நடைபெறுகின்றது .இந்த விடயம் பற்றிய பாபுரைகள் செய்தால் கூட சில நேரங்களில் சில அழுத்தங்கள் இருக்க தான் செய்கின்றது இருந்தாலும் .இது நம் கடமை

 

நன்றி : திரு .இராவணன்
வலைதளத்திற்காக : தமிழன் மணியன்
 
 திரு.தமிழ் நாடன் கருத்து

 ஈழத்தின் வரலாறு(சுருக்கமாக) பற்றிய உங்கள் கருத்து ?

(பல்லாண்டுகளுக்கு முன்னர், இயற்கையான நில அமைப்பில், இன்றைய இலங்கையானது இன்றைய இந்திய துணைக்கண்டத்தோடு இணைந்து ஒரே நிலபரப்பாகத்தான் இருந்தது இதை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும் தங்களின் ஆய்வு முடிபுகளில் தெரிவித்துள்ளனர்.

சற்று பின்னோக்கி இலங்கை வரலாற்றை பார்போம் :

முந்தைய இலங்கையில் இருந்த தமிழர்களில் நாகர்கள் -இயக்கர்கள் என்ற இரண்டு வகையான பழந்தமிழ் சமூகம் வாழ்ந்து வந்தது .பின்பு நடைபெற்ற வட இந்திய மக்களின் குடிஏற்றத்திற்கு  பின்பு  அதாவது ஒரிசா – வங்காள மக்களின் குடியேற்றத்திற்கு பின்பு  தான் சிங்களம் என்ற ஒரு இனம் உருவாகியது என்பது வரலாற்று உண்மை .அதாவது நாம் முன்பே பார்த்தது போல தமிழர்களின் இரண்டு குழுக்களில் இருந்து இயக்கர்களும் வட இந்திய குடியேற்ற மக்களும் இணைந்த ஒரு இனம் தான் இன்றைய சிங்களம்  என்பது தான் உண்மை .

தால மீ  – என்ற கிரேக்க புவியியல் அறிஞர் அன்றைக்கு வரைந்த இலங்கையின் வரைபடத்தின் மூலம் இந்த உண்மையை அறிய இயலும். இது நடை பெற்றது இரண்டாம் நூற்றாண்டு.

 தமிழர்களின் நிலைப்பாடு :

இன்று தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்க காரணமானவர்கள் ஆங்கிலேயர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அடிமை வேலை செய்வதற்க்காகவே தமிழர்களை ஆங்கிலேயர்கள் தேர்வு செய்தார்கள். கேள்வியே கேட்காமல் வேலை செய்ய கூடியவன் தமிழன் மட்டும் தான் என்பது அவர்களும் அன்றே அறிந்து இருந்தார்கள் போல. அப்படி குடியமர்த்த பட்ட தமிழர்கள் – இந்திய தமிழர்கள்  தொட்ட வேலைகளுக்காக இலங்கைக்கு ஆங்கிலே ஆட்சி காலத்தில் குடி அமர்த்தபடுகின்றகள். தல மீ இன்  வரைபடத்தை பார்போம்மானால்  அன்றைய இலங்கை நிலபரப்பில் அதிகபட்ச இடம் தமிழர்கள் வாசம் தான் இருந்தது என்பது தெரிய வரும். நாகர்களின் ஆட்சி – இரண்டு பேரரசின்  கீழ்  இருந்தது அது கண்டி மற்றும் வன்னி பேரரசாக இருந்தது மட்டுமல்லாமல் பல குறுநில அரசுகளும் இருந்தன.

இயக்கர்களும் வட இந்திய குடியேற்ற மக்களும் இணைந்து  உருவாகிய சிங்களர்களின் ஆட்சி என்பது நடைபெற்று வந்தது. இவை எல்லாமே இலங்கை மக்கள் தங்களைத்தானே  ஆட்சி செய்த காலத்தில் இருந்த விடயங்கள். பின்னர் டச்சு மற்றும் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றது  குறிப்பிட வேண்டியதாகும்.

இந்திய விடுதலைக்கு ஒரு ஆண்டிற்குப் பிறகு இலங்கைக்கு விடுதலை கிடைத்தது ஆனால் அன்றைய நிலவரப்படி சிங்களர்களின் பெரும்பான்மை மட்டுமே கணக்கில் கொண்டதின் பேரில் சிங்களர்களுக்கு மட்டுமே ஆட்சி என்ற ஒரு நிலைபாடற்ற ஒரு நிலையில் இலங்கை சுதந்திரம் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டு விட்டது. அன்று  முதல் சிங்கள ஆதிக்க ஆட்சி அமலுக்கு வந்தது அவர்கள் நிறைவேற்றிய முதல் தீர்மானம் தோட்டதொழிலாளர்களுக்கு குடிஉரிமை  மறுக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை.

அவர்களின் தமிழ் இனத்திற்கு எதிரான பல்வேறு தீர்மானங்களைப் பார்போம் :

v    குடி உரிமை மறுக்கப்பட்டது

v   தமிழர்கள் பதவிகள் பறிக்கப்பட்டது

v  தமிழர்கள் நிலபரப்பில் சிங்கள குடியேற்றம்

v சிங்கள மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது

v தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது

இலங்கையில் – தமிழர்களின் அற போராட்டங்கள் :

தந்தை செல்வா வின் அறப்போராட்டம்

பல போராட்டங்களின் மூலம் தமிழர்களின் மனதில் இடம் பிடித்தவர் தந்தை செல்வா. நீண்ட அறப்போரடங்களின் மூலம்  சிங்கள அரசின்  கடும் கோபத்திற்கு ஆளானவர்களில் தந்தை செல்வா அவர்களின்  போராட்டம் குறிப்பிடதக்கது.

அறப்போரட்டங்களுக்கு சிங்கள அரசு கடுமையான எதிர் விளைவுகளை செய்தது கடுமையான இன படுகொலைகளை செய்தது கொஞ்சம் கொஞ்சமாக  தமிழ் மக்களை கொன்று குவித்தது சிங்கள அரசு .மாணவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கிளர்ச்சி ,அரசு ஊழியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கிளர்ச்சி போன்றவை காரணமாகவும் நீண்ட தமிழர் இன அழிப்பு ஆரம்பமாகியது, .1983 முன்னர் சுமார் நான்குமுறை இனபடுகொலை நடைபெற்றது. முதன் முதலாக  

.1983 முன்னர் சுமார் நான்குமுறை இனபடுகொலை நடைபெற்றது .முதன் முதலாக 1983 தமிழ் இளைஞர்கள் ஆயுதம் எந்த துவங்கினார்கள் .ஒரு கொலைக்கு ஆயிரம் பேரை பழி வாங்கியது சிங்கள அரசு.

   ஈழ இனபடுகொலையில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ?

இந்திய அரசு இந்த இனபடுகொலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றது என்பது உலகளாவிய உண்மை. இந்திய அரசு நினத்திருந்தால் இந்த இனப்படுகொலையை கண்டிப்பாக நிறுத்தி இருக்க முடியும். ஆனால் இந்திய இறையாண்மை வெளிஉறவு கோட்பாடு  போன்றவை இதற்க்கு இடம் கொடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகின்றது ஆனால் இன்று நடைபெறுகின்ற இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, ஆயுதம் அனுப்பாமல் இருக்கலாம் என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றார்கள். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் இன்றளவுக்கும் ஓட்டு  வங்கியாகவே மக்களை  பயன்படுத்துகின்றார்களே தவிர  இவ்விடயம் பற்றிய தெளிவான உண்மையோ அல்லது மக்களின் உணர்வுக்கோ இந்திய அரசும் தமிழக அரசும் எதிரான ஒரு விடயத்தை தான் இன்றளவும் செய்து வருகின்றது

v தமிழர்களுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற விடயங்களுக்கான சான்றுகள் ?

v உதகையில் – இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி  அளிக்கப்பட்டது

v தாம்பரத்தில் – இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி  அளிக்கப்பட்டது

v இலங்கையில் இந்திய இராணுவ அதிகாரிகள் உள்ள படங்கள் வெளிவந்துள்ளது.

இது போன்று இன்னும் பல சான்றுகளைக் கூறலாம்.

தொடரும் ….

நன்றி : தமிழ் நாடன்

தமிழர் சமூக நீதி பேரவை

வலைதளத்திற்காக : தமிழன் மணியன்

 

Advertisements

2 responses

7 04 2010
வித்யாசாகர்

வணக்கம் பா..,

ஏற்கக் கூடிய கருத்துக் கணிப்புகளும்; அறிந்துக் கொள்ள கூடிய ஈழத் தகவல்களும் நன்றிகளுக்குரிய தங்களின் பணியை எடுத்துரைக்கிறது. தொடர்ந்து செயல்படுங்கள், தங்களை போன்ற தீப்பொறிகளில் இருந்து பற்றியெரியட்டும் நம்; இன விடுதலைக்கான விழிப்புணர்வு நெருப்பு!

நன்றிகளுடன்,

வித்யாசாகர்

16 11 2011
பிரியா

தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
ungal-idhayam.blogspot.com
-பிரியா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: