தமிழுக்கு ஏதாவது செய்வதை விட தமிழிலில் எதாவது செய் வோம் தோழர்களே ………..

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
பொன்மொழிகள்

உன் அண்டை வீட்டுக்காரனின் வயிறு
பசியோடு இருக்கும் போது
தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன்
என்னை சார்ந்தவனில்லை
இருப்பவன் இல்லாதவனுக்கு
கொடுத்து வாழ்வது
எல்லாவற்றையும் விட மேன்மையானது
கொடுத்து மகிழ்ந்து அனைத்தும்
பெருவோம்

[நபி மொழி]

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன.
(சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.
(ஷேக்ஸ்பியர்)

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்.
(லாங்பெல்லோ)

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது
(அரிஸ்டாட்டில்)

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே
(அனுபவ வாக்கு)

மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான்.
(ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை
(விட்மன்)

சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது.
(டிபியன் போர்ட்)

உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்
(ஷில்லாவகில்)

தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு
(ஓர் அறிஞர்)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல
(வின்ஸ்ட்டன் சர்ச்சில்)

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்
(காந்தியடிகள்)

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
(ஓர் அனுபவசாலி)

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும்.
(அரவிந்தர்)

கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்
(கிளெண்டல்)

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்.
(டொரோதி தெலூசி)

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை.
(எமர்சன்)

மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
வாரியார் சுவாமிகள்)

உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள்.
ஜேம்ஸ் ஆலன்)

இறைவனின் தரிசனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும்.
(சுவாமி ராமதாஸ்)

நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்.
(ஓர் அறிஞர்)

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.
(மு.வ.)

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
(ஜான்ஸன்)

ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
(வில்லியம் ஹாஸ்விட்)

ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது.
(ஷாம்பர்ட்)

நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
அரவிந்தர்)

உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.
(சுவாமி விவேகானந்தர்)

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது
கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.
(பிளேட்டோ)

காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்.
(ஹேக்ஸ்பியர்)

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்.
(மகாத்மா காந்தி)

அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான்.
(யாரோ)

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்.
(மாரியோ போஜியோ)

துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான்.
(ஹென்றி லீவ்ஸ்)

கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்.
(ராபர்ட் பிராஸ்ட்)

 

1. நண்பனை கஷ்ட காலத்திலும் வீரனை போர்க்களத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

2. உழைப்பின் வேர்கள் கசப்பு. அதன் கனிகள் இனிப்பு.

3. எல்லோரும் தீர்க்க வேண்டிய கடன் ஒன்று உள்ளது.அது தான் மரணம்.

4. முயற்சி இல்லாமல் வாழும் வாழ்வு, துடுப்பு இல்லாத படகு போன்றதாகும்.

5. பச்சை குழந்தைகளின் கேள்விக்கு, மகா அறிவாளி கூட பதில் கூற முடியாது.

6. தாமே பெற்றோர்களாக மாறும் வரை, பெற்றோர்களின் பாசத்தை புரிந்து கொள்ள முடியாது.

7. கடனோடு காலையில் எழுவதை விட, பட்டினியோடு இரவில் படுப்பது மேல்.

8. மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள். உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.

9.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தான்டித் தான் உயரமுடியும்.

10.நண்பனாக நடிப்பவனை விட நேரடி எதிரி மேலானவன்.

11.இன்பத்திற்காக மனிதன் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கிற்து.

12.எத்தனை நாட்கள் வாழ்ந்தாய் என்பது பெரிதல்ல, வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்திருக்கிறாய் என்பதே பெரிது.

13.உனது முயற்ச்சிக்கு பயிற்ச்சியை உணவிடு, புரட்சிகள் பூக்களாய் மலரும்.

14.அறிவாளிகளின் வார்த்தைகளைவிட அனுபவசாலிகளின் வார்த்தை உன்னதமாய் இருக்கும்

15.அகங்காரம் அறிவை வள்ர்க்காது.

Advertisements

3 responses

28 03 2011
மலர்ப்ரியன்

அருமையான பணி… பயனுள்ள வாசகங்கள். ஆன்றோரின் வாக்கியங்களுக்கு ஒரு மனிதனின் வாழ்க்கை மாற்றும் சக்தி உண்டு.

8 12 2011
Rama Rajan

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

8 12 2011
Rama Rajan

tamil ponmozhigal..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: