* “விழித்தெழு இளைஞர் இயக்கம்”

mumbai_human_chain_20090301_out

ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மும்பையில்  (ஞாயிற்றுக்கிழமை) மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் மீதான தாக்குதலை சிறீலங்கா அரசு நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும், தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும், இந்தியா துரோகத்தனத்தை நிறுத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் இதே முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

mumbai_human_chain_20090301_004

பிற்பகல் 3:00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் அரசியல், மதம், சாதி பேதங்கள் இன்றி 25,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழின முன்னேற்றம், விடுதலை, சுய மரியாதை போன்ற அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு கடந்த 3 மாதங்களின் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மும்பையின் விழித்தெழு இளைஞர் இயக்கம்” இந்த மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

mumbai_human_chain_20090301_007

இந்த மனித சங்கிலியில் கட்சிகளின் பதாகைகள், துண்டுகள் மற்றும் அடையாளங்கள் சகிதம் கலந்துகொள்ள முற்பட்ட சிலர் மக்களால் அகற்றப்பட்டு அங்கிருந்து நீக்கப்பட்டதுடன், சுயநல இனத்துரோகிகள் என மக்களால் குற்றம் சுமத்தப்பட்டனர்.

mumbai_human_chain_20090301_002

மூன்று மாதங்களின் முன்னர் இனமத பேதமின்றி ஆரம்பிக்கப்பட்ட தமது “விழித்தெழு இளைஞர் இயக்கத்தால்” கட்சி பேதமின்றி மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டுவர முடியும் என்றால், அரசியல் கட்சிகள் இதனை உதாரணமாகக் கொள்ள வேண்டும் என, “வழித்தெழு இளைஞர் இயக்கம்” அழைப்பு விடுத்துள்ளது.

mumbai_human_chain_20090301_003

இவ்வளவு பெரிய மனித சங்கிலியை உருவாக்கிய நண்பர் மகிழ்நன் அவர்களுக்கும் அவர்கள் இயக்கதர்களுக்கும் குவைத் தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம் மும்பை தமிழனை போல தமிழக தமிழ் உணர்வாளர்களும் சங்கலி போராட்டம் நடத்த வேண்டாம் குறைந்தது உங்கள் உணர்வை வரும் தேர்தலிலாவது ….காசுக்கு வாக்கை விற்காமல் உணர்வுகளுக்கு சற்று ஆதரவு கொடுங்களேன்

நன்றிகளுடன்
தமிழன் மணியன்

 

Advertisements

2 responses

30 03 2009
மகிழ்நன்

தோழர்களிடம் இந்த தளத்தில் வந்த இந்த பாராட்டி செய்தியை சொன்னேன், மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

+919769137032

31 08 2009
ஜார்ஜ் பிரபாகரன்.ச

நாடெங்கும் வாழ்கிறான் தமிழன் ஆனால்….,
அவனுக்கு கென்று ஒரு நாடு கூட இல்லை………. என்ன அவலம் மடா இந்த உலகில்………..!!!!!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு கடல் உள்ளது……….. அது வெறும் கடல் நீர் அல்ல எம் தாய் மண்ணின் புதல்வர்களின் கண்ணீர் துளிகள்……….. இனியாவது இவர்களுக்கு விடிவு கிடைக்குமோ………..?

நாம் சுகந்திர தினம் கொண்டாட அருகதை அற்றவர்கள்…. நாம் எங்கே சுகதிரம் பெற்றுவிட்டோம்,,, நம் மக்கள் இன்னும் அடிமைகளை போன்றுதானே இருக்கிறார்கள் பிறகு என்ன சுங்கந்திர தினம் நமக்கு………? ? ? ?

நாம் வாழ பிறரின் வாழ்வை கெடுக்க வேண்டாம்……, பிறர் வாழ நாம் ஒரு காரணமாய் இருப்போம்……………

இப்படிக்கு,
ஜார்ஜ் பிரபாகரன்.ச 9994060653

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s
%d bloggers like this: